பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 8星,

சுயநலமான தற்காப்பு உணர்வோடும் அவன் பழகுவது. தெரிந்தது. -

பொதுவில் வாழ்க்கைப் போராட்டமும் போட்டி களும், வசதிக் குறைவுகளும் உள்ள நகரங்களில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த அனைவரின் அறிவும் தற்காப்புக்கும், சுயநலத்துக்குமே செலவிடப்படுவது முத்துராமலிங்கத் துக்குப் புரிந்தது. நண்பன்தான் அப்போது அதைப் புரிய வைத்திருந்தான். தன் நண்பன்மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை. அநுதாபம்தான் ஏற்பட்டது. நண்பனைப் புரிந்து கொண்டபின் அவனிடம் மேலும் மனம்விட்டுப் பேச வரவில்லை. மனம் விட்டுக் கேட்க முடியாதவர்களிடம் மனம் விட்டுப் பேச முடியாது. அது பாறாங்கல்லில் தலையை மோதிக் கொள்வதுபோல் தான் முடியும், தண்ணிரை உறிஞ்ச வேண்டுமானால் அது பாயும் நிலம் ஈரத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்கவேண்டும். கருங்கல் பாறையில் பாயும் தண்ணீரை அது உறிஞ்சாது.

சென்னைக்கு வந்தபின் நண்பன் கருங்கல் பாறையாகி இருப்பது புரிந்தது. பிற்பகலுக்குமேல் நண்பனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மீண்டும் கிருஷ்ணாம்பேட்டைக்குச் சென்றான் அவன். . . - கிருஷ்ணாம்பேட்டையில் இப்போது நிலைமையின் வேகம் குறைந்து தணிந்திருந்தது. சுடுகாட்டு வாட்ச்மேன் முத்துராமலிங்கத்தின் கைப் பெட்டியைக் கொண்டு வந் கொடுத்துவிட்டுச் சொன்னான்:

எதிர்த்தரப்பு ஆளுங்க காமிச்சுக் கொடுத்துட்டாங்க. இங்கே போலீஸ் ரெய்டு...ஒரே ரகளையாப் போச்சு...சின்னி இதை உங்கிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு...அது வெளியே வர ரெண்டு மூணு நாளாவும்......அதுங்காட்டியும் உன்னை அந்தக் கொலைகாரன்பேட்டை ஆட்லே த ங் கி க் கச் சொல்லிச்சு...எங்ககூட வந்தின்னா இட்டுக்கினு போய் வுட்டுடுவேன். கிளம்பு... ‘. . -