பக்கம்:நிதர்சனங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மகமாயி பேசினா ள்


காட்டு ரோஜா என்று தான் முத் தாயியைக் கிரா மத்தில் யாரும் சொல்லுவார்கள். அவளுக்கென்று முறை மச்சான்கள் மூன்று நான் குபேர் இருந்தார்கள். பசை மிகுந்தவர்கள் அவர்கள், ஆனால் அவர்கள் யார் பேரிலேயும் முத்தாயியின் கன் னி நெஞ்சம் ஒட்டினால் தானே? மாசிமலைத்தே வர் என்றால் பத்து மா நன்செய்க்கும் இருபது மா புன் செய்க்கும் உடைமைக் காரர் தான்; அவர் மகனும் அவளுக்கு முறை தான். என் றாலும் அந்த மாப்பிள்ளையை ஏற்க அவள் மனம் ஒப்பவில்லை! ஒரு துண்டுப் புன் செய் நிலத்தை மட்டுமே தந்தை வழிச் சொத் தாகக் கொண்டு வயிறு வளர்த்து வந்த முத் தாயிக்கு மாசிமலைத் தேவரின் பெரிய இடத்துச் சம்பந்தம் கட்டோடு பிடிக்கவில்லை. அந்த ஆம்பளை மனச் சுத் தம் இல்லாத வுகளாம். கிணத் தடியில் பேச்சு அடிபடுது. அவுக மகனை நான் கட்டிக்க மாட்டேன்’ என்று கச்சிதமாகச் சொல்லி விட்டாள் பெற்ற வளிடம். அ. தி லி ரு ந் து இரு குடும் பங்களுக்கும் இடையில் பகை ஏற்பட்டு விட்டது முத் தாயியின் மனசுக்குப் பிடித்த மாப்பிள்ளையாக இருந்த வே லா யுதம் அந்தஸ்து பெற்றான். தன் குடும்பம் மாதிரியே அவன் குடும்பமும் இருந்தது. சமநிலைப்பட்ட சூழல் ‘இவகளையே நான் கட்டிக்கிடறேன். கட்டின பெண் சாதியைக் கண்கலங்க வைக் காமே இவக காப் பாத்து வாங்கற நம்பிக்கை எம் மனசிலே விளுந் திருச்சு.

ஆயி மகமாயி குடுத்த மனத் திடமும் கையும் காலும் இருக்குது. இதுங்களைக் கொண்டு கஷ்டத்தை வெளிக் காட்டா மெ மான மாய்க் காலந் தள்ளிப் புடலாம், ஆத் தா!’ என்றும் கூறினாள் முத் தாயி, தா யும் சம்மதம் கொடுத் தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/102&oldid=680896" இலிருந்து மீள்விக்கப்பட்டது