பக்கம்:நிதர்சனங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 3.5”

“சொல்லுங்கங்கிறேன், வாய்த் தாக்கலை’ என்று. துண்டினாள் முதியவளான கருப்பாயி, வேலா யுதத்தைப் பார்த்து.

“நேத்து ராவு தான் அறந்த சங்கிச் சந்தைப் பேட்டையிலே யிருந்து திரும்பு காலிலே மாசி மலைத் தேவர் ஆட்டு வாசலோட வந்து கிட்டிருந்தேன். அப்ப எங்க சின்னாயி மவன் சுப் பையா ஒங்க ஆட்டுக் குட்டி பறிபோன தைப் பத்திச் சொன்னான். அப்ப டியே கல்லாட்டம் நின் னு கிட்டிருந்தேன், அப்போ மாசி மலைத் தேவர் ஆறு கலம் கொள்ளு ற ஓர் ஈச்சங் கூடையைத் துணி போட்டு மூடிக் கிட்டுத் தலையிலே வச்சுச் சுமந்து கிட்டு வடக் காலே நாடிப் போனாரு; அமாசை இருட்டிலே கூடை மட்டு ந் தான் கண்ணுக்குத் தெரிஞ்சுது. ஆனால், அதுக்குள் ளா ற இருந்த சாமான் என்னா ஏதுன்னு எனக்கு விளங்கல்லே. சத்தே கழிச்சு ஆட்டுக் குட்டி கத் தின மாதிரி ஒரு சத்தம் மட்டும் என் கா துக்கு விளுந்திச்சு!.. தடம் பார்த்து நடந்து போறதுக்குள்ளே, அந்த மனுஷன் எந்தத் திக் கிலே விழுந்து மடங்கினார்னு புரியல்லே, திரும் பிட்டேன். இன்னிக்குக் கருக்கலோடே. அக்கம் பக்கம் கத் திரிக் காடு வரை போயி விசாரி ச்சுப் பார்த்தேன். ஒரு துப்பும் ஒரு தடயமும் கெடைக்கல்லே. மாசி மலைத்தேவர் கொடுக்கல் வாங்கல் வச்சிருக்கிற ஊரு குருந்தரக்கோட்டை மட்டுக்கும் இருக்கு து: மாசி மலைத்தே வரைப்பத் தி எனக்கு அம்புட்டு ஒசந்த கருத்து இல்லாங்காட்டியும், அம்புட்டுத் தொலை வுக்கு மட்டமான அபிப்பிராயமும் இது பரியந்தம் எம் மனசிலே நெருங்கினது கிடையாது. நடந்த நடப்பு இது தானுங்க எந்தப் புத்திலே எந்தப் பாம்பு குருக்குமோ, யாராலே காண வாய்க் குது...?’ என்று சொல்லி மூச்சு விட்டான் வேலாயுதம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/103&oldid=680897" இலிருந்து மீள்விக்கப்பட்டது