பக்கம்:நிதர்சனங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. காணிக்கை

வருண பகவானே! கண் திறக்க மாட்டாயா?

முத்தரசனுக்கு அழுகை அழுகையாக வந்தது. வாய்விட்டு ‘ஒ'வென்று ஒரு பாட்டம் அழுது தீர்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அழுவதற்கும் ஒரு தெம்பு வேண்டாமா? கண்களிலே கண்ணிர் வேண்டாமா? - ஒசக்கே ஆகா சத்திலவே தன் ணிக்குப் பாடு வந்தா ச்சு: இந்த இடுசாமத்திலே, எங் கண்ணிலே மட்டுக்கும் தண்ணி எப்பிடி வருமாம்? . ஆயி மகமாயி! நாடு போற போக்கைக் கண்டு ஒனக்கே நெஞ்சு பொறுக் கலையாங் காட்டி? அது தொட்டுத் தான் ஏழை பாழைங்களான எங்களையும் சேர்த்துச் சோதிக்கி றியா? மனுசங்க கண் திறந் தாத்தான், நீயும் கண் திறப்பியா?...ஐயையோ! “ பாளம் பாளமாக வெடித்துக் கிடந்த வயல்வெளியின் உச்சிச் சூடு அப்போது தான் அவனுக்கு உள்ளங் காலில் உறைத் திருக்க வேண்டும். தாவிப் பாய்ந்து ஒட்டம் பிடித் தான் அவன்.

தென் புறத்தில் காகம் கரைகிறது.

‘ஏதுணாச்சும் ஆகாரம் தட்டுப்பட்டால், பங்கு போட்டுக் கூடித் தின் கிற துக் கோசரம் சேக்காளிங் களைக் கூவிக் கூப்பிடும் காக்கை அப்படின் னு நாலும் தெரிஞ்சவங்க சொல்லுவாக!-கண் ணிர் இப்போது கரைகிறது; அந்தச் சொட்டுக் கண்ணிரில் செல்லிக் குட்டியின் பசியும் கரைந்திருக்கலாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/110&oldid=680905" இலிருந்து மீள்விக்கப்பட்டது