பக்கம்:நிதர்சனங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை

தலைப்பட்டது. தடு மாறினான்; சாய வேட்டிக் கிழிசல்வேறு குதிகாலில் பின்னிக் கொண்டது. ‘இன்னிக்கானும் எம் மவளுக்கு - கறிவேப்பிலைக்

கொழுந்தாட்டம் இருக்கிற எம் பொண்ணுக்கு பசி இர ஏதுனா ச்சும் வயிற்றுக்குப் போட்டாக வேணும்: பாவம்'-வெறி பற்றி, வெறிமூண்டு எதிர்வசம் ஒடினான்; எங்கே?--சோளக் கொல்லைக்குள்ளே தான்! பசிப்பிணி அகற்றிட ஏதாவது தட்டுப்படா தா என்ற சபலத் தி ல் தான்!

கால்களில் கடுப்பு மிஞ்சியதுதான் மிச்சம், கருகிக் காய்ந்து சரு காகித் தலை சாய்ந்து கிடந்த சத்தி யத்தின் சின்னங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டுக் காட்சியளித்த வெறும் சோளத் தட்டைகளிலே என்ன கிடைக்கும்?--

ஆ! விஷக்கிழங்குச் செடிகள்!

என்னவோ நினைவுடன் அண்டி ஒண்டி னான் சாலைத் தடத்திலே பத் திரிகை வாசிச்சவங்க ஒரு கிழமை காதைக் கடிச்சுக்கிட்டாங்க. அது இந்தச் செடிகளாகத் தான் இருக்க வேணும். இதோட அடிப் பக்கக் கிழங்கைக் கல்லி எடுத்து, சுடு தண்ணியிலே வேக வச்சு, பின் னே, நச்சுநீர் கழிஞ்சதும், அப்பாலே அதை மறு படியும் அவிச்சு கூட மாட உப்பு-பொடி ஏதாச்சும் தூவிப் போட்டுச் சாப்பிட்டாங்களாம் தெற்குச்சீமை ஆளுங்க.

ஐயோ! இந்த விஷக்கிழங்குச் செடிகள் கூட பட்டுப் போய்விட்டனவே! ஐயோ! என்னோட செல்லிக்குட்டி இம் மாம் பொழுதுக் குப் பசியிலே துடிச்சுச் செத்துக் கிட்டு இருக்குமே!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/112&oldid=680907" இலிருந்து மீள்விக்கப்பட்டது