பக்கம்:நிதர்சனங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தீபாவளிக் கடவுள்

குறியில் தன் நப்பா சையை சேர்த்து சேதி சொல்லி யனுப்பிய ஆசைக்கிழத் தி, அவ ன் வருகைக்காக ஆவலுடன் காத் திருப்பாளே? இந்த ஏழைகளுக் காவது, பசியாவரம் அருளக்கூடாத அந்த ஏழை பாங்காளன். ஹஹஹா தன் மானத்தைக்கூடக் காற்றில் பறக்க விட்டு விட்டு, திருவோடு ஏந்திய பிச்சையாண்டியாவது, வரம் கொடுப்பதாவது!

வேலையன் தன்னை மறந்து நின்றான்; யாரோ தோளில் கையை வைத்த அரவம் தெரிந்து நிமிர்ந் தா ன். ‘சோதனை போதும்; பக்தன் இனிப் பொறுக்க மாட்டான் னு ஆபத்துக்கு உதவ பண முடிச்சு டன் ஆண்டவனே மாறு வேஷத் தோடு மானத்திலே யிருந்து குதிச் சிருப்பாரோ!-இல்லே, இந்த ஏழையின் உ. சிரை இனியும் பூலோகத் திலே விட்டு வச்சா பூமா தே வி கோபிப்பாளேன் னு: எமதர்மப் பிரபுவே எருமைக் கடா வாகனத்தில் குதிச்சிருப்பாரோ” என்ற பொல்லாத கற்பனையில் தன் கண் களைத் திறந்து பார்த் தான். பஞ்சைக்குத் தஞ்சம் தர “முதலும் முடிவுமில்லான்’ பதினோராவது அவதாரம் எடுத்து அவனுக்காகக் காட்சி தரவில்லை; ஏன், தர்மப் பிரபு கூட மன மிரங்கிப் பிரசன் ன மாகித் தொலைக்கவில்லை!

ஆனால்......

அங்கே அவனைப் போல ஒர் ஏழை நின்று கொண்டிருந்தான். ஏழை-பரம ஏழை!

144 போட்டான் கூர் க்கா; வேலை யன் சட்டை” பண்ணவில்லை; வியாபாரத்தைக் கோட்டை விட முடியுமா ?

“அண்ணாச்சி! விடிஞ்சா தீவாளியாச்சே, எங்கிட்டேயிருக்கிற இந்த ஒரு மடி வேட்டியையும் வாங்கிக்கிறீங்களா? எங்க வீட்டிலே நான், என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/130&oldid=680927" இலிருந்து மீள்விக்கப்பட்டது