பக்கம்:நிதர்சனங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பதினோராம் அவதாரம்

காரியப்பன் நிர் த் தாட் சிண்யமாகவும் அட்ட காசி மாகவும் சிரிக்கலானான்: ஐயா செட்டி யாரே! எனக்கு முன்னாடியே காது குத்தியாச்சுங்க. உங்க கூத்தும் தந்திரமும் என் கிட்டவா பவிக்கும்? நான் உங்களுக்கு எழுதிக்கொடுத்த நோட்டு காணாமப் போயிடுச்சின்னு சொல்லி, நையம் பாடி, இப்ப ஒரு வாட்டி எல்லாப் பணத்தையும் கறந்துக்கிட்டு, அப் புறம் நீங்க கமுக்கமாய் ஒளிச்சு வச்சிருக்கிற அந்தப் புரோநோட்டைக் கோர்ட்டிலே போட்டு ரெண் டாம் வாட்டியும் சாடாப்பணத்தையும் வசூல் பண்ணிக்கிட வேணுமென்கிறது உங்க சூது மதித் தந் திரம் சுயபுத் தியோட வந்திருக்கிற எனக்கு இது கூடவா புரியாது. செட்டியாரே?’ என்று மீண்டும் எக்காளமிட்டுச் சிரித் தான் மாரியப்பன்,

சுப்பையா வின் இரத்த நாளங்கள் அத்தனையும்

சூடேறித் துடித்தவன். அட பாவி! என்னை மோசடிக்காரனாகவா நீ எடை போடத் துணிஞ் சிட்டே? அயோக்கியப் பயலே! என்று ரோசம்

பொங்க, மாரியப் பனை அறையக் கையை ஓங்கி னார் கப்பை : ,

அந்தக் கணத்திலே, அத்தான். அத்தான்” என்று கூவிக்கொண்டே குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள் வள்ளியம் மை.

அதே நேரத்தில், “மச்சான், மச்சான்!” என்று கூறியபடி வந்தாள் செண்பகம்.

மண் முட்டி விண் முட்டச் சிரித்த மாரியப்பன் இருந்திருந்தா ற் போலே ஏன் இப்படி விம்மிப் புடைத்து உருகிக் கரைய வேண்டும்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/144&oldid=680942" இலிருந்து மீள்விக்கப்பட்டது