பக்கம்:நிதர்சனங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 செந்தாழம் பூ முன் னுரை

கான் அண்மையில் தான் துரத்துக்குடி எக்ஸ் பிரஸ்- க்கு நன்றி தெரிவித் திருந்தேன். இப்பொழுது இரண்டாம் முறையாகவும் அதற்கு நன்றி கூற வேண் டியவனாக ஆகிறேன், அத்துடன், என் நன்றி பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் உரியது.

பெண்ணாடத்தில் ஒரு கல்யாணம்- உற் ற நண்பர் மாறுபட்ட இதயங்கள் அங்கே தமிழ் இனம்” என் உறவுப் பண் பில் பின் னிப் பிணைந்தன. ஆனந்தமான சம்பவம். விருந்து முடித்தது. தாம் பூலம் தரித்துக் கொண்டோம். பிரயாண அசதியும் அறுசுவை உண் டியும் நண்பர் களுக்கு நீலாம் பரி பாடின. மத்தியானத்தில் நான் படுக்கை தேடி அறியேன். என் மைத் துனன் ராமகிருஷ்ணனை ஒய்வு கொள்ளச் செய்தேன். -

காலாறப் போய் வரலா மென்று புறப்பட்டேன் நான் , என்னுடன் பேசிக்கொண்டே தொடர்ந்தார் மாப்பிள்ளை. உச்சி வெயிலில் நாங்கள் அமுதப் பால் நிலவின் குளிர் ச்சியை உணர்ந்தோம், நடந் தோம். ஊரின் எல்லை ஒதுங்கிக் கொண் டது.

பெரிய காடு. இருள் கை கொட்டிச் சிரித்தது. கதைகளில் காடுகளைப் படைக்கும் சந்தர்ப்பங்கள் சில எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. அப்போது என் னுள் பரவிய திகில், இப்போது என் நேஞ்சுர த்தை எப்படியோ களவாடிச் சென்றது.

‘ராமசாமி!’ என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/147&oldid=680945" இலிருந்து மீள்விக்கப்பட்டது