பக்கம்:நிதர்சனங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் # 33

அவள் ஆடினாள்.

அவன் குழலூதின்ான்.

ஐயோ, மறுபடியும் அந்த இடிச்சிரிப்பு இடை வெட்டு கிறதே? .

என் விழிகள் பிதுங்கின.

இந்திர மஹேந்திர ஜால வித்தைகளை நண்பர் எங்கே கற்றார்?

“அகோ வாரும் பிள்ளாய், எழுத்தாளரே! காதலைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை முதலில் சொல்லும்; அப்புறம் தான் நீர் மூச்சு விடவேண்டும். உஷார்!’ என்றொரு பயங்கரக் குரல் வெடித்தது. அந்த மன்மத னுடைய குரலா இப்படிக் கர்ணகடோர மாகக் கேட்கின் ந து.. ?

காதல். காதல் தானே? ... இரு மனம் ஒன்று சேரக் கனவு கண்ட காதலர்கள் அதிருஷ்ட வசமாகத் தம்பதிகளாகி விட்டால், அது அவர்களுக்கு த் தே நிலவுத் திருநாள் தான்! காதல் வெற்றி காண வில்லையென்றால், அப்புறம் காதலனும் காதலியும் பைத் திய மாகி, பேயாகி, பிசாசா கி இப்படி உங்கள் மாதிரி அலைந்து திரிய வேண் டி யதுதான்!...’

வியர்த்துக் கொட்டியது; உளறிக் கொட்டினேன். நான் என்ன செய்யட் டும்?

“பேஷ்! ஆனால் ஒன்று-நீர் சொற்களை அள்ளிக் கொட்டுகிறீர். உங்களைப்போல பைத்தியமாய்;. பேயாய், பிசாசாய்’ என்று நீர் சொன்ன வார்த்தை களைக் கேட்டு அதோ பாரும், என்னுடைய ரஞ்சிதம் கண்கலங்கி நிற்கிறாள். அவள் அழுதால், நா ன் பொறுக்கமாட்டேன். கொஞ்சம் உம்மை ஆசுவாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/149&oldid=680947" இலிருந்து மீள்விக்கப்பட்டது