பக்கம்:நிதர்சனங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 5

டவர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கருணை தான்! உங்க ைகராசி மகிமையிலே தான் புனர்ஜன்மம் எடுத் திட் டேன்; எங்க பாப்பாவும் புதுப் பிறவி எடுத் தாச்சு: நீங்க எங்க மட்டிலே, நேருக்கு நேராகவும் நிதர்சன மாகவும் தரிசனம் தந்துக் கிணு இருக்கிற ஒரு தெய்வமேதானுங் கம்மா! சிணுங்கல் இருமல் சிணுங் கியது.

“ஓ!’ என்றாள் ரே கா; பின்னர், ஒ. கே!'யும் சொன்னாள். பணத்தை உள்ளே போட்டாள்; குவிந்த பூக்கரங்கள் பிரிந்தன.

பிரியா விடையன் பிரிவிலே, கணங்கள் சில பே ப்க் கணங்களாக ஊர் கின்றன.

அடுத் தடுத்து கேஸ்கள்.

பூஞ்சிட்டு ஒமேகா விலிருந்து பான்மை கூட்டியும் பாங்கு காட்டியும் கூவியது. -

மணி பத்து, முப்பது.

ரேகா உடலின் களைப்பை உணர்ந்தும், காப்பி யின் தேவையை உணர்ந்து, மூடி வைத் திருந்தி மூடியை எடுத்தபோது ஆறிவிட்டிருந்தது புரிந்தது, காப்பி எவ்வளவு சூடானாலும் கூட நேரம் கழிந்து விட்டால், ஆறித் தான் போய்விடுகிறது. பஸ்ஸர்’ ஒலி வரவழைத்த நர்ஸ் கண்ணகியிடம் காப்பி வேண்டுமென்றாள். பட்டணத்தில் எம். பி. பி. எஸ். படித்த காலத்திலும் இவ்வாறு தான், அடிக் கடி காப்பியை சூடா க-வெகு சூடாக அருந்து வாள். சூடு என்றால் தான் அவளுக்குப் பிடிக்கும். பட்டன த்தை எண்ணிப் பார்த்தவளுக்கு என்னென்ன வோ ஞாபகங் கள் எப்படியெல்லாமோ சுழலத் தொடங்கி விட்டன. அவள் தலையும் சுழன்றது. கண் கள் மறு படி அரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/15&oldid=680948" இலிருந்து மீள்விக்கப்பட்டது