பக்கம்:நிதர்சனங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந் தாழம் பூ

I

4.

2

ஆமாம்; நான் கலைஞன் ஒவியக் கலைஞன், தான் கலைஞனாகத் தான் புவனியில் அவதரித்தேன். என் னுடன் சித்திரம் வரையத் துணை புரியும் துரிகை, வர்ணக் கலவைத் தட்டுகள், பாலட் எல் லாம் ஐக்கியப்பட்டன. கோடுகள் கிறுக்கினேன். சித்திரங்கள் உருவாகின. பருவ மாற்றங்கள் காலத் தின் வளர்ச்சியைச் சொல்லவில்லையா? என் வளர்ச் கிடிை என் சித்திரங்கள் எடுத்துக் காட்டின. அவை என் உயிரின் உயிராக அமைந்தன. இறக்கை கட்டிப் பறந்தேன் ககன வெளியிலே, இயற்கை அன்னை வான முகட்டில் தீட்டிக வானவில் ஒரு சமயம் எனக்கு மாடல்’ ஆக அமைந்தது. பூநாகம் வஞ்சத்தை உள்ளடக்கி, உயிரைக் குடிக்கும் நஞ்சை ஒளித்து வைத்துச் சீரமைத்துப் பண் சேர்த்து அற்புதமாகச் சிறு மல்லவா. அந்த ஆனந்தப் பயங்கரத்தில் செந் தாழம் பூவின் ‘அமுத விஷ’த்தை நுகர்ந்தேன். செந் தாழம் பூவும் பூ நாகமும் என் ஓவியத்தில் கைகுலுக்கிக் கொண்டன. தளிர் க் காடு: குளிர்ப்புனல்: பூலோக ரம்பை ஒருத்தி-கன்னிப்பெண்; ஆசைகளைக் கனவு களாக்கித் தளர் நடை பயின்று வந்தாள். புனலாடி வந்த அவளது உருவில் மட்டுமல்ல, ந மட்டுச் சிரிப் பைக் கக்கும் அந்தப் பூரித்த அங்கங்களிலும் புனிதம் கண்டேன். நான் ஒவியம் வரை அமர்ந்தேன். இத்தனை நாட்களாக இல்லாத ஒர் இன்ப வேதனை என்னுள் நரக வேதனையைத் தந்தது.

சித் திரம் தீட்டலானேன். அ ந் த ப் பெண் பாவையை உருவாக்கினேன். தங்கமேனி, போதை யூட்டும் பருவ எழில் மயக்கம். அன்புச் சிரிப்பு எல்லா வற்றையும் என் படத் தில் கண்டேன். என் நிலை மறந்தேன். சித்திரத்துடன் ஒடினேன், ஒடினேன். அவளை எங்கே தேடுவேன்? சீதேவி வலிய வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/152&oldid=680951" இலிருந்து மீள்விக்கப்பட்டது