பக்கம்:நிதர்சனங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறு முகம் # 43

அவள் சிரித்தாள், என் ஒவியம் கண்டு. என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டுமென்றல்லவா அவளிடம் அணுகினேன்?

-மாயக் காரி, !

ரஞ்சிதம் சொல்கிறான் :

ஆம்: நான் மாயக்காரி தான்! அதனால் தானே

எனக்கு இவருடைய காதல் கிடைத்தது- இவர் கிடைத்தார்.

காதல், சோம்பேறிகளின் தொழிலாம்!-யாரோ ஒரு பைத் தியக்காரன் சொல்லியிருப்பான். காதல் ராஜ்யம் ஒரு பூலோக சுவர்க்கமாயிற்றே! ஆசா பாசங்கள், எண்ணங்கள், கன வுகள் எல்லாம் ராஜ் யத்தின் மந்திரிகள் அல்லவா? காதல் இல்லையேல் நான் ஏது? என் நாட்டியம் ஏது? இவர் ஏது? இவரு டைய ஓவியம் ஏது?

கதாசிரியர் ஸ்ார்! பார்த் தீர்களா, மறந்து போனேன்-உங்களுடைய முதல் பூ’ கதையை நான் வாசித் துப் பார்த்தேன். பணக்காரி நிரஜாவின் உயர்ந்த காதலை அழகாகச் சித்திரித் திருக்கிறீர்கள். காண்டேகர் சொல்லியிருக்கிறாரென்று ஞாபகம்; * ஆண், பெண்ணுடைய உடலைக் காத விக்கிறான்: பெண், ஆணின் பணத்தைக் காதலிக்கிறாள்.’

சிரிப்பு வரவில்லை, உங்களுக்கு? எனக்கு ஆத் திரம் ஆத்திரமாக வந்தது. நல்ல வேளை, நீங்கள் உண்மை நடப்பை எழுதிவிட்டீர்கள்-காதலைப் பணம் தன் வலைக்குள் சிக்க வைக்கமுடியா தென் பதை ரொம்பவும் நன்றி.

காரணம் இல்லாமல், காரியங்கள் நடப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/153&oldid=680952" இலிருந்து மீள்விக்கப்பட்டது