பக்கம்:நிதர்சனங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

ஒருநாள் மஹேஸ்வரியின் சந்நிதியில் நடனமாடி னேன். இரவு, அவர் என்னைத் தன் பங்களாவில் நடனமாடப் பணித்தார். மறுத்தேன். உங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த உடல் அவருக்குக் கை மாற வேண்டு மாம்...!

என் உயிர் உங்கள் உடற் கூட்டிலே வந்து அடைக் கலம் சேரும் நாள் எந்நாளோ? ரஞ்சிதம் என்றுமே உங்கள் உயிர் : இந்தக் கடிதத்தை மஹேஸ்வரி தான் உங்கள் பார்வைக்கு அனுப்ப வேண்டும்! தாயே, தயை செய்!

இப் படிக்கு, குணசீலனின் ரஞ்சிதம்.”

அடுத்த நாள் உலகம் இச்செய்தியை அஞ்சல் செய்தது; மஹேஸ்வரியின் மண்டபத்தில் குணசீலன், ரஞ் சிதம், கோவில் தர்மகர்த்தர் ஆகிய மூவரின் சடலங்கள் கிடந்தன. திரை ச் சீலையில் உயிர் பெற். றிருந்த மஹேஸ்வரி அருட் புன் ன கை புரிந்து கொண் டி ருந் தாள் !...” -

பின் னுரை கால் புள்ளி, அரைப்புள்ளி கூட மாறாமல், அமர தம்பதிகளின் காதற் கதையை நான் எழுதி முடித் தேன். பத் திரிகாலயத் தில் அச்சுக் கோர்க்க அனுப்பு முன், எ ன் அமிர் தம் கதையைப் படித் தாள். கடைசி வில், இந்த வரிகளைச் சேர்த்துச் சிவப்பு மையால், கோடிட்டாள். -

ரஞ்சிதம் ஒரு செந் தாழம் பூ, குணசீலன் ஒரு பூ நாகம். செந் தாழம் பூவின் மணத் தை விட்டுப் பூநாகம் எப்படிப் பிரிந்திருக்க முடியும்?...... செந். தாமும் பூ வும் பூ நாகமும் இணையும்போது தான் காதல் அமரத்துவம் பெறுகிறது: பெறமுடியும்...!”

※※※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/161&oldid=680961" இலிருந்து மீள்விக்கப்பட்டது