பக்கம்:நிதர்சனங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம்

வீச்சரிவாளைப் பதட்ட த் தோடு பார்வையிட் டாள் செண்பகம். மறு இமைப்பில் அவளுடைய சிவந்த முகம் கறுக்கத் தொடங்கிற்று, வீச்சரிவாளின் கைப்பிடியில் வெட்டப்பட்டிருந்த சின்னத் தம்பி என்ற பெயர் அவளைக் கல்லாய் ச் சமையச் செய் தது! அவள் தன் தாயை நிதானமாக நோக்கினாள்: * ஆத்தா, அது அந்நியம் அசலானோட வீச்சரிவாள் இல்லே! என்றாள்.

‘பின்னே யாரோடது?’ என்று குறுக்கு மறித் தாள் கண்ணாத்தன.

‘இது சாயாக் கடைச் சின்னத் தம்பி மச்சா னோட தாக்கும்!”

‘இது எப்பிடி இங்கிட்டு வந்திச்சு?’,

‘அந்த மச்சான் ராவிலே எனக்குத் துணை வந்தார். அவரோட இத்த வீச்சரிவாளும் வந்திச்சு!”

‘ஆ’ என்று வாயைப் பிளந்தா ள் பெற்றவள் கண்களில் சினம், சிவப்பு விளக்கைக் காட்டியது: “ஊர் நாட்டிலே அந்த முரட்டுப் பிள்ளை சின்னத் தம்பியைக் கண்டா, பயந்து விலகுவாங்க. அம்மாங் கொத்த போக்கிரி உனக்குத் துணை வந்திச்சா?’ என்றாள்.

  • நல்ல பாம்பைக் கண்டு ஓடினா, அது ஒடுறவங்க தப்பா, இல்லாட்டி, பாம்போ ட த ப் பான் னு: யோசிச்சிப் பார்க்கத் தவறிட்டியே ஆத் தா! நீ சொல்றதாட்டம் அந்த சின்னத் தம்பி மச் சான் என் வரைக்கும் கூட நல்ல பாம்பு தான். சாதார ண நல்ல பாம்பு இல்லே, சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பு. அது ராத் திரி என க்குத் துணையா மட்டும் இருக்கல்லே; காவலா வும் இருந்திச்சு!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/179&oldid=680980" இலிருந்து மீள்விக்கப்பட்டது