பக்கம்:நிதர்சனங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கல்லா,

கொத்த வால் சாவடி யிலே மேனா-முனா மண் டி'க்குத் தனித் தன்மை பூண்ட வியாபார அந் தஸ்து உண்டு. வியாபாரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நாணயத்தின் ஒழுங்கும் நேர்மையின் திறனுமே இந்த அந்தஸ்துக்கு அடிப்படையான காரணங்கள். இந்தக் காரணங்களின் அடிப்படையில் தான் அத்தி மண்டியினிடம் வாடிக் கைக் காரர்களுக்கும் ச ரி. அன்றாடம் பண்டங்கள் வாங்குவோருக்கும் சரி, ஓர் அபிமானம் நிலவி வந்தது,

‘இந்த அபிமானம் ஒண்ணையே தான் அழியாத” அழிக்க முடியாத சொத்தாக நான் கருதிக்கினு இருக்கேன். என்னோட சொத்து இண்ணிக்கு இருக் கும், நாளைக் குப் போனாலும் போயிடலாம். ஆனா வியாபாரியான எனக்கும் என் வியாபாரத்தை வளர்த்து வாழ்த் துகிறபொது மக்களுக்கும் ஊடே நிலவி வாழ்ந்துக்கினு வருகிற இந்த அபிமானம் எனக்கு அப் பறங்கூட எ ன் பேரைச் சொல் விக்கினு இருக்கும்; இல் லியா?”

இந்த நன்னம்பிக்கையையே தமது தொழிலியல் வாழ்க்கையின் ஆதார சுருதியாக மதித்து வந்தார் செட் டியார்,

செட் டியார் என்றால், அவர் தாம் மேனா முத்துராமன் செட் டியார்; மேனா-முனா மண் டி. யின் ஏகபோக உரிமையாளர்.

கோடை வறுத்தெடுத்தது.

பெட்டியடியில் செட்டி யாரைக் காணோம் . அதோ, கணக்குப் பிள்ளை கடமையில் கண் பதித் தி ருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/189&oldid=680991" இலிருந்து மீள்விக்கப்பட்டது