பக்கம்:நிதர்சனங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கல்லா

அந்தக் காட்சியைக் கவனித்தார் செட்டியார். ‘வேலாயுதம், ஒரு சிறு மாறுதல். இந்தக் கல்லா மட்டும் என க்கு வேணும்’ என்று நிறுத்தினார்.

வேலாயுதம் மலைத்து நின்றுவிட்டான், எஜ மான்! ஆகிவந்ததாச்சுங்களே இந்தக் கல்லா?” என்றான். . .

செட்டியார் சிரித்தார்; ‘வேலாயுதம், எனக்கு முந்தி இருந்த இந்த மண்டிச் சொந்தக்காரர் கிட்டே நான் கல்லா வேலை க்கு அமர்ந்தேன். பிறகு, ஒர் அதிர்ஷ்டத்திலே நானே இந்த மண்டியை விலைக்கு வாங்கினேன். இப்போ என் கிட்டே வேலைக்குக் சேர்ந்து கல்லாவிலே இருந்த நீ என் கிட்டேயிருந்து இந்த மண்டியை விலைக்கு வாங்கியிருக்கே, இந்த விசித்திரமான அதிசயம் இனியும் தொடரக் கூடாதே என்ற நல்லெண்ணத் திலே தான் சுயநலக் காரன் மாதிரி, இப்போது இந்தக் கல்லா வுக்கு மட்டும் நான் டிரிமை கொண்டாடுகிறேன். இப்போதாவது விஷயம் புரியுதாப்பா, வேலாயுதம்?’ என்று விக்க லுக்கும் விம் மலுக கும் இடையே பேச்சைத் துண் டித்தார் செட்டியார். : . . .

வேலாயுதம் தெய்வத்தைப் பார்ப்பது போன்று: செட்டியாரை விழி பிதுங்க நோக்கினான். முத லாளி ஐயா!’ என்று விம்மலா னான். பிறகு, அந்தக் கல்லாவை அப்படியே எடுத்துக்கொண்டு வந்து செட்டியாரிடம் ஒப்படைத் தான்.

செட்டியார் கல்லாவைத் திறந்து பார்த்தார். அதில் இருந்த ஒரு பைசாவைத் தவிர, பாக்கி எல்லாப் பணத்தையும் வேலாயுதம் வசம் ஒப்பு வித்து விட்டு, மறந்து விடாமல் சிரிக்கலானார். அவர் மார்பில் அணைந்தது கல்லாப் பெட்டி. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/204&oldid=681020" இலிருந்து மீள்விக்கப்பட்டது