பக்கம்:நிதர்சனங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 ஆண்ை பிறந்த து

விட்டது ராஜாவின் ரோஜா வண்ணச் சட்டை, ‘அ. ட். டை! அட்டை, என்று சட்டையைப் பிடித்த வண்ணம், வண்ணச் சிரிப்பு ஏந்தி, வாய் கொள்ளா மழலை ஏந்தி கை கொட்டிக் குதுர கலம் அடைந்தானே ராஜா.

ராஜாவின் சட்டையை வைத்துக் கொண்டு அழுது புலம் பிக் கொண்டிருந்தாள் மீனா, ராஜா கண்ணை மூடும் தருணத்தில் மீனா வுக்கு ஒன்பது மாதம் இறந்த ராஜாவே மறுபடி யும் வந்து பிறப்பான் என்று நம்பினாள் அன்னை: அவ்வாறே பிறக்க வேண்டுமென்று பிரார்த்தனை யும் செய்தாள். ஒரு தஷடம், ஒரு லாபத்தில் ஈடு ஆகி, சோகத்தில் ஒர் ஆறுதல் கிட்டாதா என்று தாய் மனம் த வித்தது. ஆனால், தெய்வம் மீண்டும் அவளைச் சோதித்து விட்டது. ராஜா மறு பிறப்பு எடுக்கவில்லை. பானுக் குட்டிதான் பிறந்தாள். பானு என்றால் பானு தான்! பானு எங்ஙனம் ராஜாவாக முடியும்? ராஜா பிறப் பான் மீண்டும் என்று மேலத் தெருப்பாட்டி சொன்ன சோதிடம் பொய்த்துவிட்டதே? ஆனால் தெய்வப் பிரார்த் தனையும் பொய்த்து விடுமோ?...

ஏறுமுகச் சூரியனின் கதிர்கள் குடிசைகளைச் சூடுபடுத் திக் கொண்டிருந்தன.

மீனாவுக்குக் காலைக் கஞ்சியில் மண் விழுந்தது: சோகமும் ஏக்கமும் நெஞ்சில் நீக்கமற நிறைந்தது, வேர்ப்புழுவாக அரித்துக் கொண்டிருக்கையில், வயிறு பசிக்குமா என்ன? என்னவோ சத் தம் கேட்கவே திசை திரும்பினாள். காற் சதங்கை ஒலி கேட்டது. தி.கீரென் றது அவளுக்கு ஆடிவரும் தேனாக ராஜா ஆடி அசைந்து நடை பயின்று வரும் போது இப்படித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/208&oldid=681024" இலிருந்து மீள்விக்கப்பட்டது