பக்கம்:நிதர்சனங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Q ஆணை பிறந்தது.

சூன்யம் சிரித்தது! மீனா வுக்கு மட்டிலும் சிரிக்கத் தெரியாதா?” என்ன?- கண்ணே ராஜா! நீ எப்பவும் என்னோட நெஞ்சிலே உயிரும் நினமுமாய் வாழ்ந்துக்கிட்டு இருக்கே: நான் கொஞ்ச முந்தி உனக்குப் போட்டுப் பார்த்த சட்டை எவ்வளவு பொருத்தமா இருந்திச்சு என்கிற ரகசியம் பெற்ற எனக்கும் பிறந்த உனக்கும் மட்டுந்தானே புரியும்? இல்லையாப்பா ராஜா ?”

அடுத்த இமைப்பில்; மீனா விம்மத் தொடங்கினாள். ராஜா இதை மட்டும் நீ மறந்திடாதே! - நீ தெய்வாதீனத் தாலே திரும்பி உன்னோட - இந்தச் சொக் காயைப் போட்டுக்கிட்டாத்தான் நான் உயிர் த ரிச்சிருப் பேன்!.. இல்லாட்டி, நானும் இந்தப் சட்டையும் தியோடு தியாய்ப் பொசுங்கிப் போயிடுவோம்: ஆமா, சொல்லிட்டேண்டா, கண்ணே உன் மேலே ஆணை இது...!!

கண்ணிர்- ரத்தக் கண்ணிர் சிலிர்க்கிறது:

※※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/214&oldid=681031" இலிருந்து மீள்விக்கப்பட்டது