பக்கம்:நிதர்சனங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

மேஜையின் ஒளிப்பரப்பிலே அசல் நூறு ரூபாய் நோட்டுக்கள் கொத்துக் கொத்தாகச் சிந்திச் சிதறி வீழ்கின்றன:

அங்கே இப்போது ரிவால்வர் ஒன்றும் காட்சி அளித்தது.

அந்த ரிவால் வரைக் கையில் எடுத் தாள் ரேகா, படிரென்று வெடி சத்தம் ஒலித்தது.

இப்பொழுதுங் கூட, சத்தியசீலன் சிரிப்பை நிறுத் தவில்லை தான் ரேகா நீங்க, தமிழச்சி யாச்சே! உங்களோட அழகான உயிரை அத்தனை லகுவிலே குடிச்சிடுமா என்னோட ரிவால்வர்?பாவம், அதில் இருந்தவை அத்தனையும் போலி ரவைகளாக்கும்!” -

தலைமுடியைப் பிய்த் துக் கொண்டாள் ரே கா. “ ...ஐயையோ தெய்வ மே! என் தெய்வ மே!’ என்று மண் முட்டி விண் முட்ட, விண் முட்டி மண்முட்டக் கூ க்குர விட்டாள் அவள்!

‘ரே கா! நான் யார், தெரியுமா? தான் சத்திய சீவன் விஜயராணியாக்கும் ! வருகிறேன் ... குட்பை

குட் பை’

ரேகா பையப் ைபயச் சுயப் பிரச்சினையை மீட்டுக் கொண்டிருக்கலாம்; பேசும் கண்களை நிமிர்த்தினாள்; அந்தக் கண்களில் இப்போது ஒரு சொட்டுக் கண் ணிர் கூட இல்லை! தொண்டையை கனைத்துக் கொண்டாள்; மார கச்சேலையினைச் சீராக்கியவளாக, கம்பீரமான மிடுக்குடன் தலையை உயர்த்தி விட்டாள். மிஸ்டர் சத்தியசீலன், அப் படியே நில்லுங்க! நான் யாரென்று தெரியுங்களா? நான் மிலஸ் ரேகா சத்தியசீலனாக்கும்! ஆல் ரைட்! இனி நீங்க உங்க போலி வேஷத்தைக் கலைச்சிட்டு உங்க ரிவால்வரோடும் பணத் தோடும் போகலாம் ...”

தயவுசெய்து யாரும் சத்தம் போடக்கூடாது!.. டாக்டர் ரே கா எம்.பி.பி.எஸ். உள்ளே இருக்கிறாள்! .. ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/33&oldid=681045" இலிருந்து மீள்விக்கப்பட்டது