பக்கம்:நிதர்சனங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ ஏரோப்பினேன் காளை

‘நீங்க ஒண்ணுங்க மா.மு. காளை யாவது பறக்கிற தாவது? தேசிங்கு மவராசா குருதை தான் கண்ணு கடை தெரியாம பறக்கு மின் னு பெரிய எழுத்து தேசிங்குராசா கதையிலே போட்டுருக்குண்ணு கோடி வீட்டுத் தம்பி படிச்சுச் சொல்லும்! இப்ப நீங்க இதை மனசிலே முடிபோட்டு வச்சுக்க வேணு முங்க!” என்று செல்லையா பெரிய தகவல் ஒன்றுக் குப் பீடிகை போடுவதை உணர்ந்த கங்காணி, இடை மறித்துக் குறுக்கு க்குரல் எழுப்பினார். வந்த தாலோடவே நிக்கிறீங்களே, செல்லையா மாப் பிள்ளை! வாங்க குந்திக்கினே பேச்சாடலாம்:

இவ்வாறு சொல்லிக்கொண்டே முந்த சுருட் இக்கு உயிர்ப்பிச்சை நல்கி நடந்த போழ்தில், கோலம் பரப்பிக் கிடந்த இடத்தில் அழகுக்கு அணி வாகக் காட்சி தந்த பறங்கிப் பூக்களின் வாடிய போக்கைக் காணச் சகியாதவர் போன்று அவற்றை தம் பாதங்களால் எற்றி வீசினார். நடை முடியுமா?

பினாங்கு விரிப்பில் இருவரும் அமர்ந்தார்கள்.

அந்திவெயில் அந்தம் போர்த்துக் கொண்டது. வெய்யல் கீழ்த் திண்ணை கங்கில் சரம் கட்டிக் கதிர் களை முடிந்தது. இருபத்தைந்து நாழிகைப் பொழு தல்லவா?

“மாமா, வந்துங்க...’ என்று இதழ்களை லேஞ்சி னால் துடைத்த வண்ணம் செல்லையா நகர்ந்து கங்காணியின் தொடையை இடித் தான்.

அது தருணம், சாரைப்பாம்பை நிகர்த்த விசை பாய்ச்சி வாசற்புறம் வந்த செவந்தி தன்னுடைய மதர்த்த விழிகளை விளையாட விட்ட மாத்திரத்தில், சுவரொட்டி விளக்கை ஏந்த வேண்டிய ஏந்திழை, தடுமாற்றத்தை ஏந்தியவளாக உள்ளுக்குள் பதுங்கிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/44&oldid=681057" இலிருந்து மீள்விக்கப்பட்டது