பக்கம்:நிதர்சனங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் ?

“அப்பா இங்கிட்டாலே பாருங்களேன்!” என்று கூறினாள் செவந்தி. அ. வ ள து தளிர்க்கரங்கள் பானை ஒன்றை ஏந்தியிருந்தன. வேடு கட்டி விருந்த கிழிசலை விலக்கினாள்.

கங்காணி மூக் கைப் பொத்திக் கொண்டார். கை எட்டும் தொலைவில் கிடந்த மூக்காலி யில் இருந்த கை விளக்கை எடுத்துப் பொருத்தினார். சாராயத் தண் ணி! துர!... சனியன்!” என்று காறித் துப்பினார்.

‘ஏது அம் மா இந்தப் பா ைன?

‘எனக்குக் கட்டி வைக்க நீங்க முடிவு நெஞ்சிருக் கீங்களே, அந்த ஆம் பிள்ளை ஆட்டுச் சொத்து அப்பா இது சனியன் னு இன்னொரு வாட்டி பேசாதீங்க இதான் சீதேவி!...”*

“மெய்யாலுமா?”

“மெய்ப்பி க்க வேணு மாமே? விடிய ட் டும். அற ந் தாங்கி தாணாவிலே இருந்து வந்து விசாரிப்பாங்க. அப்ப அல்லாம் வெட்ட வெளிச்சமாயிடும். கள்ளச் சாராயம் காய்ச்சி, அலஞ்சிறாங்காட்டு ரெட்டைப் பனைக் காட்டிலே இம் பிட்டு நாளா கூத்து ஆடிக் கிட்டு வார வுகளோட கதை ஒட்டுக்க அம் பல மாகாமலா இருக்கப் போவுது ?. ஆத்தா நல்லவ!’

மடைவாயினின்றும் *  : .ெ ச ல் லு ம் பாருங்கள்- நிறைப் பெருக்கு, அம்மாதிரி இருந்தது. அவள் பேச்சு, சீரகச் சம்பா நெல் தளைகளிலே பூத்துச் சிரிக்கும் மணிகளிலே இலங்குகின்ற கருவம் அவளுடைய வாய்மொழிகளில் ரேகை பதித்தது. அவள் கையில் செல்லையா என்று பின்னப்பட்டிருந்த சிங்கப்பூர்க் கைபிடித்துண் டு இருந்தது! பானையைச் சுற்றி மறுபடியும் துணி சுற்றினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/57&oldid=681071" இலிருந்து மீள்விக்கப்பட்டது