பக்கம்:நிதர்சனங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தேவி கரு மாரி

தயமான-விநயமான பிரதிநிதியாக விளங்குகிற, அவளுக்கு-அந்த நவீன நல்ல தங்காளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அழுகை அழுகையாக வந்தது. பழைய - பழைமையான நல்ல தங்காளுக்குத் தானொன்றும் குறைந்தவளல்லள் எ ன் ப ைத. மெய்ப்பித்துக் காட்டியவள் மாதிரி அங்கே பெற்றுப் போட்டுப் பிறந்து கிடந்த அத்தனை குழந்தை களையும் பார்த்தா ள்; பார்த்தாள், பார்த்துக் கொண்டேயிருக்கிறாள்!--

டேய் மணி . ராமு . கமல் ரசினி....அம் மாடி சீதேவி, லட்சுமி, அம்பிகா!’ - அழைத் தாள்; வெகு; கச்சித மாகவே விளித் தாள். ஆனாலும், அவளுக்கு. இவ்வளவு ஞாபகச் சக்தி இருக்கக் கூடாது தான்!

கெட்ட சொப் பனம் கண்ட பாவனை களில் குழந்தைகள் பசியைத் தாள மாட்டாமலே, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார் கள்.

அவள் மனம்- மனச்சாட்சி உள்வட்டத்தில் சுழித்துக் குமுறியது; கதறியது. பாவி நான்! நான் பெத்த பிள்ளைங்களோட பசியையும் பட்டினியையும் காணச் சகிக்காமல், கொஞ்சம் முந்தி நான் போய்ப் புத் தி பேதவிச்சாப்பிலே பழாய்ப்போன இந்தக் கடலிலே நான் சுயநலத்தோட குதிச்சுச் செத்துப் போயிருந்தேன்னா, இந்நேரம் எம்பிள்ளைங்க முழிச் செழுந்து என்னைக் காணாமல் அம்மா அம்மா’ன்னு: அலறித் தவிச்சுத் தடுமாறி, அதுங்களும் மனு சத் தனம் இத்துப்போன இந்தக் கடலுக்குப் பலியாகி இருக்குங்களோ?...தெய்வம்னு ஒண்ணு லோகத் திலே இருக்கத் தான் இருக்கும் போலே!-அதொட்டுத் தான் நாங்க எட்டு ஜீவனும், உயிர் பிழைச்சிக் கிட்டோம்!...ரத்த மும் கண்ணிராக லிஞ்ஞானம்: மாற்றம் பெறலாமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/86&oldid=681103" இலிருந்து மீள்விக்கப்பட்டது