பக்கம்:நிதர்சனங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தேவி கரு மாரி

அவள் மணல் வெளியில் விரிக்கப் பட்டிருந்த கந்தல் துணியை உதறினாள். சாஸ்திரத்திற்கேனும் ஒர் ஐந்து காசா கிலும் தர்மம் செய்திடப் புண்ணிய வான் ஒருவன் கூட இல்லாமல் போய்விட்டானா?-- ஆத்தளே!- கண்களுக்குத் தெரியாத, ஆனால், நெஞ்சுக்கு ஏழையாய்ப் பிறந்து விட்ட பாவத்தைத் தவிர வேறெந்தப் பாவத்தையும் அறிந்திருக் காத நெஞ்சுக்குத் தெரிந்த ஆத்தாளை நினைத்து நெஞ்சு நெகிழ்ந்தவளாக அவள் நடந்தாள். நடந்து கொண் டிருந்தாள் :-ஏழு பிள்ளை குட்டிகள் பின் தொடர நடந்து கொண்டேயிருந்தாள்!

பட்டனம் எவ்வளவு அழகாக, வெளிச்சமாக . ஆடம்பரமாக இருக்கிறது!

ஜார்ஜ் டவுன்!

பாவம், ஐந்தாம் ஜார்ஜ்!-பாவமல்ல, புண் ணிையம்! போய் விட்டான் சென்ற மண்ணுக்கே போய்த்தொலைந்தும் போய் விட்டான் !

அதோ...

அரண்மனை மாதிரியான ஒரு வீடு, ஊ கூம்; பங்களா! -

அவள் நின்றாள்.

“நாய்கள் ஜாக்கிரதை’ என்கிற எச்சரிப்புப் பலகை மட்டிலும் நிற்கவில்லை; ஆடியது; ஆட்டம் போட்டது:

“தாயே பசிக்குது, பிச்சை போடு தாயே” அழைத் தாள், கூவினாள், அலறினாள் பெற்ற வள்!

நாக்குகளில் ஈரம் வழிந்திட ஏழு குழந்தைகளும்

பங்களாவின் உட்புறத்தில் ஆசையோடும் பசி யோடும் பசிக்காகவோடும் பார்த்தார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/88&oldid=681105" இலிருந்து மீள்விக்கப்பட்டது