பக்கம்:நிதர்சனங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மகமாயி பேசினாள்

பார்த் தாக்கா ஒண்ணைக் காணல்லையே! நானு என்ன செய்யட்டும்? சுத் துவட்டம் முழுதும் அரிச் செடுத்துப் பார்த் தாச் சு. ஒரு த டயமும் தட்டுப் படல் லையே?’ என்றாள் முத் தாயி. அந்திக் கதிர்கள் அவளது முகத் திரையில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டேயிருந்தன.

ஆமா, நீ ஆடு மேய்ச்சுக் கிட்டு இருக்கிறப்போ குளத்திலே யாரா ச்சும் இருந்தாங்களா?’

சற்றே நிதானமாகச் சிந்தித் தாள் முத் தாயி. பிறகு, தலையைச் சிலுப்பிக்கொண்டாள். தண்ணிர் தெளித்தால் ஆடு தலையைச் சிலுப்பி உலுக்கிக் கொள்ளுமே, அப்படி! நம்ம பெரிய அயித்தை புருசன் மட்டுக்கும் குளிச்சு முழுகி வெளியேறிக்கிட்டு இருந்தாக என்று பதில் சொன்னாள் கன்னிப்பெண்.

‘அந்த அண்ணாச்சியா? அந்த ஆளு மாசிமலைத் தேவருதான் ஆடு குட்டி போடறதுக்கு முந்தியே இதை விலைக்குக் கேட்டாரே! அவருகிட்ட தாக்கல் தகவல் விசாரிக்கப்புடாதா? வழித் தடத்திலே எங்கானும் குட்டி ஒண்ணு தடம் மாறித் தென் பட்டுச் சான்னு கேட்டா என்ன, ஆத்தா?’’

‘எல்லாம் கேட்டாச்சு! அந்த ஆளு தனக்குத் தெரியாது அப்படின்னு நறுக்குத் தெறிச்சமாதிரி சொல்லிட்டாரு, ஆத்தா! அவர் மகனுக்கு நான் வாழ்க்கைப்பட ச் சம்மதிக் கலைங்கிற ஆத்திரம் இன்னமும் அவருக்கு. மூஞ்சியை மாறவச்சிக்கிட்டு ஆட்டுக்குள்ளா ற இருந்த வாக்கிலேயே சொன்னாரு அவரு!’ -

‘உம்’ என்று பெருமூச்செறித்தாள் தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/98&oldid=681116" இலிருந்து மீள்விக்கப்பட்டது