பக்கம்:நிதர்சனங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் - 89

தாய் ஆடு மீண்டும் தீன மாகக் கத்தியது. பெண் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் தம் சகோதரனைக் காணாமல் மறு கின. பாசத்தின் பிரிவு அங்கு மவுன

மாக வருந்தித் துடித்துக்கொண்டிருந்தது.

முத் தாயி கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு அந் த த் தாய் ஆட்டை யும் குட் டி களையும் பரிவுடன் பார்த்த வளாக நின்றாள். பின்னர், அவற்றைப் கேட் மூலையில் கட்டிப் போட்டாள். இலை தழை களைப் பகிர்ந்து போட்டாள். புளியங்கொட்டைகள் மிகுந்த வடிகஞ்சிச் சட்டியைத் தாய் ஆட்டின் முன்னே வசமாக இழுத்து வைத் தாள்.

தாய் ஆடு ஒருமுறை அந்த வடிகஞ்சியை நக்கியது: பிறகு தலையை உலுக்கியது. மீண்டும் குட்டிகளை நாக்கால் தடவிய படி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ம்...மே!’ என்று குரல் கொடுத்தது.

இரண்டு குட்டிகளும், ‘ம்...மே!’ என்று பதில் குரல் கொடுக்கத் தொடங்கின.

பனி வாடை வீசியது.

மாக்கோ லத்தில் அம்மன் தேர் எழுதி, அதன் உச்சியில் பறங்கிப் பூ வைத்துத் தொழுது தலை நிமிர்ந்தாள் முத்தாயி.

காலை இளங்கதிரவன் கண்சிமிட்டத் தொடங்கி னான். ‘ஏண்டி, முத் தாயி! ஒங்க ஆட்டு ஆட்டுக் குட்டியைக் காணல்லையாமே? நம்ம குப்பாயி இந்த ச் சேதியைக் கா திலே போட்டா; ரா வுக்கு வர முடியல்லை. பாவம், அந்தக் குட் டி. நாலாறு மாசம் வளர்த் தாக் கா நாப்பது அம்பது க்குச் செவ்வாய் ச் சந்தையிலே விலை போகுமே!’ என்று சொல்லித் தன் அதுதாபத் தைத் தெரிவித்தாள் பொன்னம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/99&oldid=681117" இலிருந்து மீள்விக்கப்பட்டது