பக்கம்:நித்தியமல்லி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

. யாட்டிலே அவளது கன்னி மனத்தின் சில இலட்சியங் களும் பங்குபற்றின. கனவு, திட்டம், லட்சியம் ஆகிய மையச் சிந்தனைகள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை யல்ல! என்று அவள் தனக்குத் தானே அடிக்கொருமுறை சிந்தித்துத் தெளிந்த நிலைகளே-நினவுகளை யெல்லாம் அவள் நினைவு கூர்ந்தாள். அந்நினவின் மனமோகனப் பின்னணியில் அவளுள்ளே தோன்றிய அவ்வுருவம், அவ குருக்குச் சுகந்தத்தின் கம்பீரத் தூதுபோல அமைந்தது. "மிஸ்டர் உதயணன்' என்ற பெயரை அவள் மனம் மின் ஒலிப்பதிவு செய்து காட்டியது. ஒரு சம்பவத்தை அவளால் மறக்கவே முடியாது. 姿 来源 来源 அன்று காலேஜ் முடிந்து வீடு திரும்பிக் கொண்டி ருந்தாள். சாந்தோம் பஸ் நிறுத்தத்தில் அவள் வந்து தின் ருள். ஆடித் தென்றல் இதமாக வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தது. அச்சுகம் அவளுக்கு மிகவும் தேவைப் பட்டது டவுனுக்குப் புறப்படவேண்டும், அப்போது பஸ் வந்துவிட்டது தமிழ்ச்சுடர் பஸ்ஸில் ஏறிவிட முனைந்தாள், கூட்டம் நெரித்தது. ஆகவே, ஒதுங்கினுள். ஒதுங்கிளைா? ஆம்: ஒதுங்கிக் கொள்ளாத ஆண்களுக்கு மத்தியில், அவள் ஒதுங்குவதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்? அத் தகைய அவசரக்காரர்களைப்பற்றி ஆத்திரம் கொண்டா ளவள் ஆலுைம் பெண்.அதிலும் கன்னிப் பெண்ணுல், அடாவடி பேச முடியுமா? பேசிஞல் அது நாகரிகப்பண்பு ஆகுமா? 'சே' - அவள் இக்குறிப்பை அடக்கக்கூட வில்லை. தன்னுள் சொல்லிக் கொண்டாள். இந்நிலையில் வேர்வை வழியத் தொடங்கிவிட்டது. கைப்பிடித் துணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/10&oldid=1277285" இலிருந்து மீள்விக்கப்பட்டது