பக்கம்:நித்தியமல்லி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

. கொண்டு துடைத்துக் கொண்டாள். காலாறச் சற்று. இடம் மாற்றி நிற்க எத்தனம் செய்தபோது உதயண னின் இள நீலவர்ணக்கார்-அம்பாவிடர்-துதுபோல அங்கு வந்து நின்றது போலும்! 'ஹல்லோ!' என்ருன் உதயணன். தமிழ்ச் சுடர் புன்னகை செய்தாள். போதமும் போதையும் மடைகட்டி மணம் கட்டிப் பதித்திருந்த உதடுகளுக்கு நாணப்பட சொல்லியா தரவேண்டும்? ரோஜாப் பூக்கள் கதுப்புக்களில் மலர்ந்தன தான் வீட்டுக்குச் செல்வதாகத் தெரிவித்தாள். அவனே அவளை தன் வீட்டுக்கு அல்ல, பங்களாவுக்கு அழைத்துச் சென்ருன். மாம்பலத்தில் பங்களா! அங்கு உதயணனின் தாய் மட்டும் இருந்தாள். தந்தை தியாகராய நகரில் வட்டிக்கடையில் இருப்) பதாகச் சொன்னன். தமிழ்ச் சுடருக்கு ராஜோபசாரம் நடந்தது. அவள் விடைபெற்றுத் திரும்பும் கட்டத்தில், பலமானதொரு சத்தம் திடுதிடுப்பென்று பீறிட்டது. அவள் அதிர்ச்சியுடன் திரும்பினுள். கோடியில் இருந்த, ஓர் அறையில்-பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து ஜன்னல் கம்பிகளினூடே ஒர் உருவம்-ஓர் இளம் உருவம் தெரிந்தது. மீண்டும் கதறல் காதுகளைச் செவிடுபட அடித்தது. - . அதற்குள் நாகுக்காக தமிழ்ச் சுடருக்கு விடை. கொடுத்தனுப்பிவிட்டான் உதயணன். நடந்த அந்த சம்பவத்தை மறந்து உதயணனைப் பற்றிய நட்புச் சம்பவத்தில் அவள் இதயம் கட்டுண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/11&oldid=1277286" இலிருந்து மீள்விக்கப்பட்டது