பக்கம்:நித்தியமல்லி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10ሽ தமிழ்ச்சுடர் உடம்பைச் சிலிரித்துக்கொண்டாள். கடவுளைப்போலவே தன் தாயும் விடுவிக்க முடியாதி புதிராகவே தோன்றினுள் அவளுக்கு. புதிரென்ன"புதிர்?. வைரநெக்லஸை மறுத்ததுடன் ஆனந்தரங்கத்தின் இரண்டாவது வேண்டுகோளையும் மறுத்ததற்கு அடை யாளமாகத்தான் அடிக்குறிப்புப்பு பதிலை அம்மா எழுதி விட்டாளே? அதற்கு மறைமுகமான அத்தாட்சிபோலத் தான், ராஜசேகரனைப்பற்றிப் பேச்சை எடுத்து விட்டாளே? மீண்டும் அவளுக்கு இதே நினைவோட்டம் தொடர்ந்தது. அன்று இராத் தூக்கம் செட்டதுடன். இனிமேல் பரீட்சை முடியும் பரியந்தம் இந்தக் காதல் வியவகாரத்தைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது!’ என்று தான் திடசங்கற்பம் செய்துகொடிருந்தாள். ஆனல் நேற்று மாலையில் உதயணன் அவளே-தமிழ்ச்சுடரைச் சந்தித்தான். நம் லவ்மாரேஜ் பற்றி உங்க மதர் "ஒ கே. சொல்லிவிட்டார்களா?' என்று ரொம்பவும் அவசரப்பட்டுக் கேட்டான். அவள் அவசரமில்லாமல் இளநகைசிந்தினள். உங்க அப்பா உங்க காதலை-விருப்பத்தை அங்கீகரித்து விட்டார். ஆனல் என் அம்மாவாக நம் காதலைப் பற்றி யூகம் செய்து என்னிடம் கேட்டால்தான், நான் என் மனத்தை அவர்களிடம் திறந்து காட்டமுடியும். நான் .ெ பண். ஆண்களைப்போல அவரசரப்பட்டுவிடமுடி யாது. என் உள்ளம், நாம் இருவரும் முதன் முதலாகச் சந்தித்துக்கொண்டோமே அக்கணமே உங்கள் வசப்பட்டு. விட்டது. ஆகவே, என் மாதிரி தாங்களும் பரீட்சை முடியும்வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித் தால்தான் நல்லது. அன்று நீங்கள் விரும்பின மாதிரி, தெய்வ அருள் இருந்தால், நாம் பரீட்சைக்குப்பின் தம்பதியாகி விடுவோம்!... ஒன்றுமட்டும் சத்தியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/108&oldid=786547" இலிருந்து மீள்விக்கப்பட்டது