பக்கம்:நித்தியமல்லி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


கும் வரவர முடியலை, கோபிச்சுக்காதேம்மா!...நீதோசை சாப்பிட்டானதும், எனக்காக ஒரு பதினஞ்சு நிமிஷம் ஒதுக்கம்மா. நேற்றைக்கே உன்கிட்டே பேசவேணும்னு யோசிச்சேன். நீ மு ன் நேரந்திலேயே அசந்து துங்கிட்டே அதனலே உன்னை உசுப்ப மனசுவரல் லேம்மா! சரி, முதலிலே தோசைசாப்பிடவாடி, வா, கண்ணே!' என்று நயந்து கூப்பிட்டாள். அம்மாவின் தூய பாசத்தின் பரிவால் வழக்கம்போல நெகிழ்ச்சி அடைந்தவளாக, அவளுடன் பின்கட்டுக்குத் தொடர்ந்தாள். தமிழ்ச்சுடர். காப்பி பலகாரம் முடிந்தது. தாயும் மகளும் ஹாலில் வந்து அமர்ந்தார்கள். மரகதத்திம்மை சுருக்கம் படிந்து வெளிறியிருந்த தன் நெற்றியில் வலது கைவிரல்களை வைத்து அழுத்திய வளாக ஒர் அரைக்கணம் சிந்தனை வசப்பட்டிருந்தாள். அன்னையின் தோற்றம் ஒருபுறம் நம்பிக்கையை வயும், மறுபுறம் பயத்தையும் மாறிமாறி உண்டாக்கிக் கொண்டிருந்தன, தமிழ்ச்சுடரின் காதல் நெஞ்சத் .திலே, ஆனல், அம்மா தன்னிடம் இவ்வளவு பீடிகை லியுடன் பேச முன் வத்திருப்பது கட்டாயம் தன் கல்யாண விஷயமாகத்தான் இருக்குமென்றே அவள் ஊகித்தாள். இதைத் தவிர, அந்தக்குடும்பத்தில் இப்போதைக்கு அத்துணை அவசரமானகாரியம் வேறு என்ன இருக்க முடியும்? ஆனால், அம்மாவிடம்தான் பரீட்சைக்குப் பிறகுதான் என் திருமண விஷயம்! என்று சொல்லி விட்டாளே தமிழ்ச்சுடர்! . . . . . ஒருதினம் அவள் படித்த சொல்லித் தெரிவதில்லை!" என்ற நவீனத்தில் காணப்பட்ட வரிகள் அவள் நினைவில் குமிழ் பறித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/110&oldid=1277368" இலிருந்து மீள்விக்கப்பட்டது