பக்கம்:நித்தியமல்லி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዝ 10 "காதல் சட்டம் கடந்தது. ஆனல், காதலின் சட்டம் கடவுளுக்கும் கூடஒரு விடுகதைதான்!" அவள் விநய பூர்வமாக அக்குறிப்பை அங்கீகரிக்கவே. செய்தாள். சட்டம் கடந்த விதியாகவே இப்போது: தன்னுடைய காதல் வியவகாரம் சுய உருவைக் காட்டப் போகிறதோ, என்னவோ? "அம்மா சுடர்!’ என்னம்மா!' மரகதத்தம் மை பேச இதழ் பிரித்தாள். அவ்வேளையில் வாசல் வெளியில் கார்ச்சத்தம். கேட்டது. காரொலியில் தெருநாய்களின் கூக்குரல் கூட அடங்கித்தான் போயிருந்தது. தமிழ்ச்சுடர் எழுந்து எட்டிப்பார்த்தாள். டாச்ஸி ஒன்றிலிருந்து ஒரு மனிதர் இறங்கி உள்ளே சென்ருர். தமிழ்ச்சுடருக்கு அந்த ஆளை இனம் புரியவில்லை. மரகதத்தம்மைக்குப் புரிந்தது. வாங்கய்யா !” என்ருள். - "ஆமாம்மா ஐயாகிட்டே நானு பட்டிருந்த கட. னுக்கு முந்தி ஒருவாட்டி ஒரு நூறுருபாய்த்தான் செலுத் திட்டுப் போனேன். இடையிலே வீட்டிலே காயலாவா ஆயிட்டாங்கா. வர முடியலே. இப்போ ஒரு நானுாறு தாரேன். இன்னும் நூறு ரூபாயும் வட்டியும் மார்ச்சு. மத்தியிலே தந்திடறேன். தந்திட்டு புரோநோட்டை ரத்து செஞ்சுக்கினு போயிட்றேன் அம்மா ? இந்தாங்க கம்மா நானூறு' என்று சொல்லி நான்கு நூறுரூபாய். சலவைத்தாள்களை நீட்டினர் வந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/111&oldid=786551" இலிருந்து மீள்விக்கப்பட்டது