பக்கம்:நித்தியமல்லி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


எதுக்கெடுத்தாலும் அரசாங்கத்து பேரிலே பழியைப் போட்டித் தப்பிக்கிறது சுத்த தப்பு. நமக்கும் இந்த மாதிரிகடமைகளிலே பொறுப்பு இருக்கு என்கிறதை நாம் மறந்திடக் கூடாது!’ என்ருள் மரகதத்தம்மாள். அப்போது நாலைந்து போலீஸ்காரர்களும் பக்கக் து விட்டு பாங்க் காஷியரும் அங்கே பிரசன்னமாளுர்கள். மரகதத்தம்மை விழித்தாள். "அம்மா, இந்த ஐயா அரசாங்க விருந்தாளியாகப் போகிருரம்மா. முன்பொருவாட்டி ந ம் ைம இக் கட்டிலே மாட்டி வச்சுதே ஒரு நூறு ரூபாய் நோட்டு, அதைக் கொடுத்த ஆளே உனக்கு இனம் புரியலேயே, அந்த புண்ணியவான் இவர் தானம்மா ! இந்த நாலு நூறு ரூபாய் நோட்டுகளும் அசல் கள்ள நோட்டுகளாக் கும் ' என்று வியாக்கியானம் சொன்னுள் தமிழ்ச் சுடர். நரசய்யாவின் விழிப்புடன் அவரது கைகளில் மாட்டப்பட்ட கை விலங்குகளின் ஒளி மோதியது. அப்போது, இன்னெரு ஆள்-கிழவன் உள்ளே வந்தான். "அம்மா, நம்ப ஐயா காலமாகிறதுக்கு முந்தி ஒரு .ரிக்ஷா வாங்கிறத்துக்காக எங்கிட்டே முந் நூறு ரூபாய் கடன் கொடுத்தாங்க. நோட்டுசாட்டு எதுவும் இல்லே. ஆளு, ஐயா திடும்னு காலமாகிட்ட விவரம் ரொம்பநாள் கழிக்சுதான் தெரிஞ்சது. நடப்பை உங்ககையிலே சொல்லிப்பிடணும்னு தவிச்சேன் ஆன. பணத்தோட வந்துதான் சொல்லணும்னு இருந்திட்டேன். இப்பதான் அந்த்ப்பணத்தை என்னலே கொண்டாந்து கொடுக்க முடிஞ்சது. ஒண்ணும் அரையுமாய் மிச்சம் பிடிச்சது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/113&oldid=1277369" இலிருந்து மீள்விக்கப்பட்டது