பக்கம்:நித்தியமல்லி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 குயிலாய் வந்தாள் குமாரி பங்கஜம். முகத்தில் பவுடர் அபிஷேகம். கையில் டம்பப்பை' கல்லூரிச்சிநேகிதியை எதிர்கொண்டு அழைத் தாள் தமிழ்ச்சுடர். ஸ்ஃபயரிலே ஒரு இங்கிலீஷ் படம் ஆடுது, உன் னையும் அழைச்சிட்டுப்போக வந்தேன்!' என்ருள் :பங்கஜம். தமிழ்ச்சுடர் தன் தாயைப் பார்த்தாள். "உன் ஓயாத படிப்புக்கு ஒரு சேஞ்சாக இருக்கும். போயிட்டு வாம்மா !” "சரி, சேஞ்ச் கொடுங்கம்மா !' என்ருள் பங்கஜம், பணம் கொடுத்தாள் தாய். ஆமா, கதை . எப்படி ?’ என்று கேட்டாள். காதலியைக் கைவிட்ட காதலனை பழிக்குப்பழி வாங்கும் ஒரு அயலேப் பெண்ணின் கதை அம்மா இது: பிரமாதமான படமாம்! என் நண்பர் சாரங்கன் சொன் +: ளுர்!’ மரகதத்தம்மைக்கு வேர்த்துக் கொட்டியது. காதலிலே தோற்றது தோற்ருகி விட்டது. பின் தன் காதலனைப் பழி வாங்கத்தான் வேண்டும் ? இதில் என்ன செண்டிமென்ட் இருக்குதாம்?. குற்றத்தை மறந்து மன்னிப்பதுதானே தர்மம்?...” என்று இடை மறித்தாள் தமிழ்ச்சுடர். அவள் குரலில்தான் எத்துணை ஆத்திரம்?. சிமிக்கிகள் ஆடின! - உன் வாதம் சரி, ஆலுைம் படத்தைப்பார்த்தால் அநமக்கு ஒரு நிம்மதியாக இருக்குமே வா, போகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/115&oldid=786555" இலிருந்து மீள்விக்கப்பட்டது