பக்கம்:நித்தியமல்லி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 34. அட கடவுளே!... சரி, நீ கல்யாணத்துக்கு எப் போது போக வேணும்?” நான் போவதாக உத்தேசமில்லையம்மா! இந்த அணுயுகத்திலே தாய்ப் பாசத்துக்குக்கூட சோதனை வந்திட்டுது! பத்து மாதம் சுமந்து பெற்ற தாயைக்கூட துச்சமாக மதிக்கிறதுக்கு இந்த விசித்திரயுகம் இந்தப் பெண்ணுக்குத் துணிச்சலைத் தந்திட்டுதே! ஈஸ்வரா!' மரகதத்தம்மாள் உணர்ச்சிப் பெருக்குடன் நின்ருள் "சரி, புறப்படலாம், சுடர்... கோபிச்சுக்காதேம்மா! புறப்படு, தமிழ்ச்சுடர்' தமிழ்ச்சுடர் சிரிப்புடன் நகர்ந்தாள். 粥 笨 笼 வாசலில் அப்போது உதயணன் இளநீலவர்ணக் லாரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். வாங்க!' என்று முகமன் மொழிந்தாள் தமிழ்ச் சுடர். முத்துவளைகளும் சிமிக்கிகளும் மஞ்சள் ஒளியில் மின்னின. "ஆமாம்!' என்று சிரித்தான் உதயணன். நல்ல சிரிப்பு வரவில்லை அவனிடமிருந்து. - மரகதத்தம்மாள் நிமிர்ந்து பார்த்து உதயணனக் கண்டு மகிழ்ந்து வாங்க, தம்பி’ என்ருள். அவன் இப்போதும் நல்ல சிரிப்பைக் கொட்ட முடிய வில்லை. . என்னவோ போல இருக்கீங்களே? உடம்பு சரியில் கல்யா, மிஸ்டர் உதயணன்?' விசாரித்தாள் குமாரி தமிழ்ச்சுடர். "உடம்புக்கு ஒன்றுமில்லை. மனம் சரியில்லை. அம்மா வுக்கு ரொம்பக் காலமாய் விட்டுவிட்டு வருகிற சித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/135&oldid=786577" இலிருந்து மீள்விக்கப்பட்டது