பக்கம்:நித்தியமல்லி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


அப்போது, மரகதம்' என்ற மென்குரல் ஒன்று மிகவும் பாந்தவ்யத்'துடன் மிதந்து வந்தது. மரகதத்தம்மை ஏறிட்டு நிமிர்ந்தாள். இடது பக்கம் கண்ணே மறைத்து நின்ற ஒரு முடி இழையை நீவி விட்டாள். 'ஓ..நீங்களா?’ என்று ஆச்சரியத்துடன் சொன்னுள். "என்ன விஷயம்? பனம் கொடுக்க வேணுமா? நான் கொடுத்திடுறேனே? அப்புறம் நீ. நீங்க கொடுத்திட லாமே!” என்று கூறினர் அவர். வாசனைத்திரவியத்தின் நெடி பரவிவந்தது. "எனக்காகச் சிரமப்பட வேண்டாங்க...நீங்க உங்க அலுவலைப் பார்க்கலாம், மிஸ்டர் ஆனந்தரங்கம்!...எனக் குப் பணத்துக்குப் பஞ்சமில்லை!. நீங்க எவ்வளவு தங்க மான மனிதர்! பாவம், எனக்காக நீங்க சிரமப்படலாமா? சே.சே! கூடாது! கூடாது' என்ருள் மரகதத் தம்மை. கன்னங்களின் இருபுறங்களையும் வலதுகை துனிவிரலால் துடைத்துக் கொண்டாள். மாரகச் சேலையை இழுத்துப் போர்த்துக் கொண்டாள். அந்த இழுப்புக்குள் ரவிக்கை யின் கைப்பகுதிகள் கூட முடங்கிவிட்டன. போலும்! திருவாளர் ஆனந்தரங்கத்தின் முகம் விகாரமடைந் தது உள்ளத்தின் சலனத்தை அவரது முகவிலாசம் எவ்வளவுதான் கட்டுப்படுத்த முயன்ருலும், முடிய வில்லை. அவருடைய கண்களில் செம்மை படர்ந்தது. அவர் மறு பேச்சாடாமல், ஒதுங்கினர். ஜாக்கெட் துணிகள் சிலவற்றை நோட்டமிட்டார். காஷியர் குமாரதேவன், இளம் மீசையை இப்போது நாகுக்காக வருடிவிட்டுக்கொண்டான். தமிழ்ச்சுடர் கொடுத்த டோஸ் இப்போதுதான் வேலைசெய்ததோ? இல்லாவிட்டால், முன்னமேயே அவன் தன் ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/19&oldid=1277291" இலிருந்து மீள்விக்கப்பட்டது