பக்கம்:நித்தியமல்லி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 9 அமீசையை நினைத்திருக்கமாட்டான? அலுவல் முடிந்ததும் தமிழ்ச்சுடரைப் பார்த்தான். பார்த்த சூட்டுடன் டெலி போன் டயலில் எண்களைச் சுழற்றினன். அதற்குள் வாசற்புறத்தில் பிளஷர் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஓர் இளைஞன் வந்திறங்கினன். அவன் கடையினுள் நுழைந்ததுதான் தாமதம், தாமத மின்றி அங்கு அழகான அமைதி பரவத்தொடங்கியது. காஷியர் எழுந்து வெளிப்புறம் வந்து நின்முன். இறங்சின இளைஞன் காஷ் மேஜையை ஒட்டி உள்ளே நுழைந்து சுழல் நாற்காலியில் ஒயிலாக அமர்ந் .திான். அவன்தான் சின்ன முதலாளி - அதாவது, பெரிய முதலாளியான அவன் தகப்பனர் அவனிடம் கடையை ஒப்படைத்ததற்கப்புறம், அப்போதிருந்த சின்ன முதலாளி என்ற அதே பட்டத்துடனே இப் போதும் அவன் ராஜ்யபாரம் செலுத்தி வந்தான். அவன் பெயர்: ராஜசேகரன். ராஜகளேதான். பெயர்ப் பொருத்தம் சில தருணங்களில் வாகாய் அமைந்து கை கூடுவது இல்லையா?-அப்படிப்பட்ட பாங்கு. விஷயத்தை மேலிடத்தில் சமர்ப்பித்தான் குமார தேவன். - ராஜசேகரன் தன் ஆசனத்தை விட்டு எழுந்தான். வலது கை மோதிரவிரலில் ஒளிவீசிய வைரங்கள் கவர்ச்சியைக் காட்டின. வெளிப்புறம் வந்து நின்ருன். மஸ்லின் வேஷ்டி தரையைக் கூட்டியது. தரையைக் கூட்ட எடுபிடிகள் இருந்த்னரென்பதும் உண்மைதான். மரகதத்தம்மையை நாடினன். அருகில் நின்ற தமிழ்ச் சுடரின் சாயலைக் கணித் தவ ன க அவன் அண்டிப் போனன் என்னேட ஆணைக்குக் கட்டுப்பட்ட சம்பளக் காரன் குமாரதேவன். அவன் சொல்லைத் தப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/20&oldid=786591" இலிருந்து மீள்விக்கப்பட்டது