பக்கம்:நித்தியமல்லி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


வரலே! கடவுளும் வரலே!' என்ருன் கிழவன் ஒருவன் அவன் ரிக்ஷாவாலாவாக இருக்கலாம்! தமிழ்ச் சுடரின் சிந்தனையை அப்பேச்சு தூண்டிவிட்டது. வாழ்க்கையும் மனிதப்பிறப்பும் பரவலாகச் சோதிக்கப்படுகையில், ஒரு பெரும் பிரச்னையாகவும். போராட்டமாகவுமே தோன்றுவதாக உணரப்படுகிற: ஒரு அந்தரங்கப் பலவீனம் அப்போது அவனுக்கு ஒரு மகத்தான உண்மை போலவே தென்படலாயிற்று. ஒரு முறை தன் அன்னே மனம் கசந்து இந்த வாழ்க்கையை பற்றிப் பேசவில்லையா? கீழ் மட்டத்தில் இருப்பவர் களுக்கு மட்டும் வாழ்வு அப்படித் தோன்ற வில்லை. மேல் மட்டக்காரர்களுக்கும் கூட வாழ்க் கை அப்படித்தான் நிம்மதியற்றுத் தோற்றம் கொடுக்கிறது! -அப்படி என்ருல், இத்தகைய ரசாயான பேத நிலைதான் வாழ்க் கையின் புதிரா ? இந் நிலமை தான் வாழ்வின் நிரந்தர விதியோ? மேற்கண்ட புதிரின் விதிக்கு ஒரு சாட்சியமாக ஆனந்த ரங்கத்தின் அமைதியிழந்த மன உளைச்சல் அமைந்து விட்டிருந்த, ஒர் அதிசயப் போக்கைதான் நிதர்சனமாகக் கண்ட காட்சியை தமிழ்ச்சுடர் எங்ங்னம்: மறப்பாள்? பூத்தொட்டிகளில் மல்லிகைச் செடிகள் இருந்தன. மலரத் துடித்த பக்குவத்தோடு அமைதியாகக் காணப் பட்ட மொக்குகளை அவள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே யிருந்தாள். மல்லிகை மொட்டுக் களின் அந்தரங்க மணமாக தன்னுடைய உள்ளத்தின் உள்ளே இயங்கிக் கொண்டிருந்த ஆசைக்கனவுகளின் இனிய நினைப்புக்களோடு தன்னை மறந்த லயத்தில் கைகளை நெஞ்சகத்தின் குறுக்காகக் கட்டிய வாறு நின்ற தமிழ்ச்சுடர் ஏதேதோ எண்ணப்புயலின் உளேச்சலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/64&oldid=1277330" இலிருந்து மீள்விக்கப்பட்டது