பக்கம்:நித்தியமல்லி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


காலை இளம் பரிதியின் ஆரோக்கியமான கிரணங்கள் அவளுக்குக் காலத்தைச் சொல்லிக் காட்டின. மணி எட்டு, நிமிஷம் பத்து, விடிை ஏழு!-மீண்டும் அவள் தன் வசப்பட்டுத் திரும்பினுள். நிலைப்படியில் வந்து நின்ருள். மரகதத் தம்மை * அம்மா சுடர், வாம்மா பலகாரம் சாப்பிட, அப்புறம் தோசை ஆறிப் போயிடாதா? ரெண்டு தோசையைக் கட்டு தட்டிலே வச்சுட்டு வந்திருக்கேன். தோசைச்கல் வேறே தீஞ்சிடப் போகுது, சுடர்' என்ருள். பாசத்தின் கலவையில் சொற்கள் பிணைந்தன; ஒலித்தன. தமிழ்ச்சுடர் மெல்ல நடந்து வந்தாள். “虚 என்னம்மா, எப்பவுமே தமிழை மறந்திடுறியம்மா? என்ருள், அரைக்கணம் மரகத்தம்மைக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மகளின் கேள்வி அவளுக்குக் குழப்பத்தைக் கொடுத் தது. வெள்ளைப் புடவையின் முன்ருண்ையைக் கொய் தெடுத்து, முகத்தில் துளிர்த்திருந்த வேர்வைத் துளிகளைக் கொய் தெடுத்தாள். பிறகுதான் அவளுக்குச் சட் டென்று விஷயம் பிடிபட்டது. "ஓஹோ! உன்னைத் தமிழ்ச்சுடர்னு அழைக்காமல் வெறும் சுடர்னு அழைச்ச துக்காக அப்படிச் சொல்றீயாம்மா?. நீயுந்தான் எவ்வ ளவோ தரம் எனக்கு ஞாபகப்படுத்துகிருய். நானும் தான் அதை மறந்துக் கிட்டேயிருக்கேன். சரியம்மா தமிழ்ச்சுடர், வா. சாப்பிடலாம். அப்புறம், பரிசு விழா வுக்கு நேரமாகிப் போகுதம்மா!...” என்று துரிதப்படுத் தினுள் தாய். . . மகள் பின் தொடர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/7&oldid=1277284" இலிருந்து மீள்விக்கப்பட்டது