பக்கம்:நித்தியமல்லி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T தோசையின் இனிய மணமும் புதின ச் சட்டினியின் அவையான வாசனையும் பரவிக் கிடந்தன. ரங்கூன் தடுக்கில் தமிழ்ச் சுடர் குந்தினுள், செவ்வல ரிப் பூவிரல்கள் தோசையைத் துண்டாடிக் கிள்ளின. இதழ்களிலே ருசி கனிந்திருக்க வேண்டும். அவள் நப்புக் கொட்டிச் சாப்பிட்டாள். குவளைத் தண்ணிரை 'அண்ணுந்து குடித்தாள். இடது புறச்சேலேயை இழுத்து விட்டுக் கொண்டாள். குடும் சுவையும் ஒடோடி வந்தன. போதும் அம்மா." - 'இந்த ஒரு தோசையை மட்டும் சாப்பிடம்மா. கடர். தமிழ்ச்சுடர். அதுக்குள்ளே, முட்டைத் தோசை ரெடியாயிடும்!. தமிழ்ச்சுடர் பாசத்தின் பரிவுடன் பெற்றவளை ஏறிட்டுப் பார்த்தாள். மரகதத் தம்மையின் விழிகளிலே கலக்கம் தடம் காட்டியது. உங்கப்பாவுக்கு முட்டைத் தோசன்ன போதும், ஒரே கொண்டாட்டம்தான்!” அவளால் தொடர்ந்து பேச்சைத் தொடர மு டி ய வி ல் லே; தொண்டையை அடைத்தது. தமிழ்ச்சுடரின் நெஞ்சு கனகனத்தது. தோசைக் கல் லின் கரையோரங்களில் எண்ணெய்த் துளிகள் சுரீர்” என்று ஒசைப்படுத்தின. விரிந்து கிடந்த செய்தித்தாள் தமிழ்ச்சுடரின் கவனத்தைக் கவர்ந்தது. அப்பா இருந்திருந்தால், இப் போது என் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கும் அல்லவா? பாவம், அம்மா! அவர்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/8&oldid=786656" இலிருந்து மீள்விக்கப்பட்டது