பக்கம்:நித்தியமல்லி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


"அப்படியா? ஒன்று சொல்லி, தன் கையில் பிடிப் :பிலிருந்த பையை மடியில் வைத்து அந்தத் தந்தப் பெட்டியை எடுத்து காவற்காரக் கிழவனிடம் நீட்டி, இந்தாங்க. இதிலே விலையுயர்ந்த பொருள் இருக்கு: இதை முதல் வேலையாய் ஐயா எழுந்ததும் கொடுத்து விடுங்க,' என்று குறிப்பிட்டு எழுந்தாள் மரகதத் தம்மை. தாகம் எடுத்தது, அடக்கிக் கொண்டாள் ! செங்கமல வல்லியைப் பற்றிக் கேட்க நினைத்தாள். தேவையற்றதென்று பிறகு நினைத்தாள். புறப்பட்டாள் மரகதம் ! அந்தக் காவற்காரனின் பெயர் என்ன, தெரியுமா? -தனகோடி!...... 12. வாழ்க்கை எனும் கடமை. 'அம்மா' என்று பாசம் வழிய அழைத்துக் கொண்டோ வீட்டின் படிகட்டில் கால் வைத்த தமிழ்ச் சுடர் அப்படியே தயங்கியவளாகச் சில கணங்கள் மலைத்து நின்ருள். அந்த மலைப்புக்குக் காரணம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு பதில் கொடுத்து, * வா ம் மா ’ என்று அன்பு கனிய, பாசம் பாசம் வழிய, பரிவு மிளர அழைப்புக் கொடுக்கும் அன்னேயின் மெளனம் தான் அவளுக்குப்பு:திரான மலைப் புக் கொடுத்தது, கிரேப்சில்க்கின் முன்ருணைப் பகுதியை இழுத்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டபடி, சேலைக்கு இணைந்த மிளகாய்பழ வர்ணச் சோளியைச் சீர் செய்து கொண்டே, கல்லூரிப் புத்தகங்கனை வலது கை விரல் பிடியில் மாற்றிக்கொண்டு திரும்பவும் திக் பிரமைவிடித்து நின்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/84&oldid=1277347" இலிருந்து மீள்விக்கப்பட்டது