பக்கம்:நித்தியமல்லி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

. அம்மா!' மீண்டும் அழைத்தாள் தமிழ்ச்சுடர். குரலில் தழு. தழுப்பு இருந்தது. பதட்டம் மேனியில் இருந்தது. பரத. விப்பு இதயத்தில் இருந்தது. உள்ளே எட்டிப்பார்த். தாள். விளக்குக்கூட போடவில்லை, தெரு இருட்டு: உள்ளே இடம் மாறியிருந்தது. தெருவிளக்கின் வெளிச்சம் நிலைவரை எப்படிப் பார்த்தது. நிலா புறப் பட இன்னும் நேரம் இருந்தது. உள்ளே நுழைந்தாள், வெளிப்புறக் கதவு சாத்தப் பட்டிருந்தது. உட்பக்கம் நாதாங்கி இடப்பட்டிருக்க. வில்லை. கதவைத்திறந்து உள்ளே நடந்து நடையில் இருந்த மின் விளக்கின் பொத்தானை அழுத்தினுள். விளக்கு துலாம்பரமாக எரிந்தது. 蠟 தமிழ்ச்சுடரின் பார்வையில் ஒரு காட்சி விளங்: கியது. அவள் அன்னை கட்டிலில் ஒருக்கணித்துப் படுத்திருந் தாள்; மரகதத்தம்மையின் இடது பக்கக் கன்னத்தில் கண்ணிரின் உவர்க்கோடுகள் படிந்திருந்தன, தன்னை: ஈன்றவளே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டி, ருந்த மகளுக்குக் கண்கள் கலங்கி வந்தன. அம்மாவின் கண்ணிருக்குக் காரணம் என்ன ? என்று அவள் தன்னை தானே-தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். அப். பாவின் பிரிவின் ஞாபகம் வந்திருக்குமோ ? என்ற பதிலே அவளுள் வினவாக வடிவெடுத்தது. இந்தப். பதிலும் அவளது உள்ளக் குமுறலை உண்டுபண்ணியது. தாம்பத்தியத்தின் சிதவு என்ருல், அந்தப்பிரிவின் ஏக்கம் கட்டையுடன் தீரும்l- அவளுக்கு நெஞ்சு வெடித்து. விடும்போலத் தோன்றியது. வாழ்க்கையே மாபெரும்: போராட்டம் என்று அன்னை சொல்லிவருவதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/85&oldid=1277348" இலிருந்து மீள்விக்கப்பட்டது