பக்கம்:நித்தியமல்லி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


அவள் எண்ணமிட்டாள். அம்மா அழுது-தனக்குத் தெரிய கண்ணிர் சொரிந்து பார்ப்பது வெகு அபூர்வம். தனிமையில் தன் மன ஆற்ருமையை இப்படிக் கண்ணி ரால் கரைத்து வருகிருள் தன் தாய் என்ற உண்மையும் அவளுக்குப் புலப்பட செய்தது. . கழிந்த சில தினங்களாகவே தான் தன் அன்சே யோடு கலகலப்பாகப் பேசவில்லை என்ற நடப்புச் சேதி அவள் நெஞ்சிலும் நினைவிலும் அலைமோதத் தொடங் கியது. அதற்குரிய காரணம் தின் சுயநலம் என்பதிை யும் அவள் புரிந்து கொள்ளாமல் இல்லை. இந்நிலைக்கு அடிப்படை என்ன ? ஆனந்தரங்கம் தன் மரணக் கோரின் கையாக தன் மைந்தனுக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டு மென்று தனது கடைசிக் கோரிக்கையை அம்மா விடம் விடுக்க, அம்மா அதற்கு இணக்கம் காட்டாத வகையில் அடிக்குறிப்பாக பதில் எழுதி வைத்த முடிவின் காரணமாக, என் காதல் சிதைந்து விட்டதே என்ற மனக்குறையா?. அல்லது. அன்று வந்த பெரிய வரிடம் விடை கொடுத்தனுப்புகையில் என்னைக் கலந்து விரைவில் வந்து முடிவு சொல்வதாக அம்மா அப்பெரிய வரிடம் சொல்லி அனுப்பியும், நாளது பரியந்தம் அதைப்பற்றி எதையும் பிரஸ்தாபிக்கவில்லேயே அம்மா என்ற மனத்தாங்கலா ?. என்ற, இரு பிரச்னைகள் அவளுள் எழுந்தபோது, பெற்றவளிடமே மகள் சடனே" கொள்ளும் அளவுக்கு தன் சுயநலம் இடம் கொடுத் திருக்கிறதே என்று உணர்ந்து அத்தவறை எண்ணி, மனம் நொந்தாள் குமாரி தமிழ்ச்சுடர் உடன் அவள் தனது தவற்றுக்குக் கழுவாய் தேடிக் கொள்ளவும் துணிந்தாள். ஆல்ை, அந்தக் கழுவாய்க்கு வழி எது நி. 6-488 - . - . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/86&oldid=1277349" இலிருந்து மீள்விக்கப்பட்டது