பக்கம்:நித்தியமல்லி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


என்ற சிந்தனைதான் அவளுக்கு விளங்காத புதிராக இருந்தது, அந்தப் புதிர் தனது காதலைத் தியாகம் இசய்ய வேண்டும் என்ற முடிவைச் செல்லிக் காட்டிய வேளையில், அவளுக்கு மண்டையே வலி தொடங்கி விட்டது. அப்போது, அவளுக்கும் வாழ்க்கை மாபெரும் போராட்டமாகவே .ே தா ன் ற த் தொடங்கியது. ஆம், வாழ்க்கை எனும் பந்தத்தில் பிணைவதற்கு முன்பே வாழ்க்கை ஒரு போராட்டமாகவும் ஒரு பிரச்னையாகவும் அவனுள் விசுவரூபம் எடுக்கத் தலைப்பட்டது. இனம் அரியாத குழப்பமும் தவிப்பும் அவளைச் சுற்றி ச் சிவந்திவலை பின்னின. அப்போது, தமிழ்ப்பூங்கா நடத்திய கட்டுரைப் போட்டியில் தான் அனுப்பிய கட்டுரையில்-வாழ்க்கை ஒரு சாதனை' என்ற அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த மையக்கருத்து அவள் நி னை வி ல் பளிச்சிட்டது. வாழ்க்கை என்பது பிரச்னையோ அல்லது போராட் 1.மோ அன்று. அது ஒரு மாண்பு பொதிந்த கடமை. அந்தக் கடமையைச் செயலாற்ற எதிர்நீச்சல் பண்பும் தன்னலமற்ற பண்பாடுமே தேவை. விரிந்த மனமும் விரிசல் காணுத உரமும் தெய்வ நம்பிக்கையும் இருந்: தால் கொண்ட கொள்கையும் கண்ட கனவும் ஈடேற நிச்சயம் வழி பிறக்கும்!. அன்பு, தர்மம், நேர்மை, பொறுமை, ஈரம், தியாகம் முதலான குணநலன்களே வாழ்வின் சாதனையைக்காக்கும்!...” இன்னும் நிரம்ப எழுதியிருந்திாள். அவள் எழுதிய வரிகளின் உயிர்ச் சித்தாந்தம் இப்போது அவளுக்கே புதுப்போதனையாக அமைந்துவிட்ட விசித்திரத்தை அவள் உணரலாளுள். அவ்வுணர்வின் தீர்ப்பாக மெய் தான், என் அன்னே சொல்லும் முடிவுதான் எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/87&oldid=1277350" இலிருந்து மீள்விக்கப்பட்டது