பக்கம்:நித்தியமல்லி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


அருகில் மண் கூஜாவில் இருந்த குளிர் நீரை ஒரு தம்ளர் வார்த்து முகத்தில் கொஞ்சம் தெளித்துக்கொண்டாள், மிகுந்ததை வாயில் ஊற்றிக்கொண்டாள். எலுமிச்சம் பழத்தின் துண்டு படாத சன்னமான வாசனை இதம. ளித்தது. "அம்மா சுடர் மணி என்ன ஆகுது?’ என்று. கேட்டாள். 'ஏழுக்கு இன்னும் ஏழு நிமிஷம் இருக்கம்மா!' அடடே, அவ்வளவு பொழுது ஆயிட்டுதா? இரும்மா, காப்பி போட்டுப்பிடறேன்!” காப்பி வேண்டாம் அம்மா!' ஏன் சுடர், என் பேரிலே உனக்குக் கோபமா?’’ சநல்ல அம்மா நீ உன் பேரிலே நான் ஏன் கோபம் படுறேன்? தெய்வத்தின் மேலே கோபப்பட நான் யாரம்மா?” இந்தப் பேச்சைக் கேட்டதும், மரகதத்தம்மாள் விநயமாக அரைச்சிரிப்பைக் காட்டினுள். தெய்வ. மாக இருந்தால் மட்டிலும் யாரும் கோபப்படக்கூடாது. என்று அர்த்தமா, என்ன? நீ சொல்வதைப் பார்த்தால், என்மேலே உன் மனத்தின் ஏதோ முடுக்கில் கொஞ்சம் கோபம் இருக்கும் போலல்லவா தோன்றுது?’ என்று. மடக்கினுள். - -

ஐயையோ! அப்படியெல்லாம் நீ சொல்லாதேம்மா. என்னலே தாங்கமுடியாது. தெய்வம் என்ருலே, அந்தச் சொல்லுக்குள்ள பொருள், இடம், அந்தஸ்து, மதிப்பு எல்லாமே தனித்து நிற்கிறதில்லையா அம்மா! பின்னே, அந்தத் தெய்வத்தின் பேரிலே கோபப்படுறதுக்கு அந்தத் தெய்வத்துக் கீழ்ப்பட்டவங்களாலே என்ன சக்தி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/89&oldid=1277352" இலிருந்து மீள்விக்கப்பட்டது