பக்கம்:நித்தியமல்லி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


அயிருக்க முடியும்? தெய்வம் என்கிறதுக்கு உண்டான முழு அர்த்தத்தோடதான் நான் உன்னை நினைச்சுக்கிட்டு வருகிறேன். உன் அன்பும் கண்டிப்பும் அந்த அளவுக்கு என்னைப் பக்குவப்படுத்தி வருகிதே. எனக்கு உண்டாகிற நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நீதானே அம்மா ஆதாரம்! அப்படிப்பட்ட என் சுகதுக்கத்திலே உனக்கும் தானே அம்மா பங்கு?...” என்று சற்றே துயரச் சுருதி காட்டிச் சொன்னுள் தமிழ்ச்சுடர். மரகதத்தம்மாள் அமைதி பூக்க புன்னகை செய் தான். பின் ஏனம்மா சில நாளாக நீ கலகலப்பாகப் பேசாமல் இருந்தே?’ என்று மறுபடி ஒரு எதிர்வின வைச் சாட்டையாகச் சொடுக்கினள். உதயணன் நினைவில் ஆழ்ந்திருந்த அவளது பெண் மையின் காதல் மனம் இக்கேள்வியால் ஒரு குலுங்குக் குலுங்கி நிமிர்ந்தது. . தமிழ்ச்சுடர் பதில் சொல்லும் வகையைப் பற்றிச் சற்றே யோசித்துக்கொண்டிருக்கையில், மரகதத்தம்மை கேட்ட கேள்வியை நல்ல வேளையாக மறந்து தொலைத் தாள். இரம்மா, காப்பி போட்டுக்கிட்டு வந்திடு கிறேன். உன் கிட்டே கொஞ்ச நேரம் பேசனும்,' என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள். உதயணனுடன் ஐஸ் காப்பி அருந்தி வந்தி அந்தத் தவிர்க்க முடியாத சம்பவத்தைத் தன் அம்மா விடம் உடனடியாகச் சொல்லாமல் விட்டு விட்டோமே. யென்ற குற்றவுணர்வு அப்போது தமிழ்ச்சுடரைப் :பாடாய்ப் படுத்தத் தொடங்கியிருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/90&oldid=1277353" இலிருந்து மீள்விக்கப்பட்டது