மறைமலை அடிகளும் நானும் 99. பெட்டி, வாதுமைக் கொட்டை, கோதுமை மா முதலிய பலபொருள்கள் அந்தப்பட்டியில் குறிக்கப்பட்டிருந்தன. உலக அனுபவமில்லாத நாங்கள் கையிலே ஒரு கூடை யைக்கூட எடுத்துச் செல்லவில்லை. ஆதலால் எங்கள் மேல் துண்டினையே கடைக்காரனிடம் கொடுக்க நேர்ந் தது. இரண்டு துண்டுகளிலும் அந்தக் கடைக்காரன் பல பொருள்களை வைத்து இரண்டு மூட்டைகளாகக் கட்டி எங்களிடம் கொடுத்தான். அந்த இரண்டு மூட் டைகளையும் நாங்கள் எங்கள் தோள் மீது வைத்துச் சுமந்து கொண்டு இரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து பல்லாவரம் இரயில் நிலையத்தை அடைவ தற்குள் பகல் 12-மணி ஆகிவிட்டது. நாங்கள் அன்று காலையில் வழக்கமாக அருந்தும் சிற்றுண்டியைக்கூட உட்கொள்ளவில்லை. அடிகளார் வீடு இரயில் நிலை யத்திற்கு அண்மையில் இருந்தும் இடம் தெரியாமை யால் சுற்றி அலைந்து பகல் ஒரு மணிக்கு அடிகளார் இல்லத்தை நாங்கள் அடைந்தோம். எங்கள் ஆசிரியர் வர இயலாத நிலையை எடுத்துச் சொல்லி அதனுல் எங்களை அனுப்பினர் என்பதையும் விளக்கிக் கூறினுேம். ஆனல் நாங்கள் இன்னுர் என்று அவரிடம் சொல்லவில்லை. ஆதலால் அவர் எங்களை வேலையாட்கள் என்று எண்ணிக் கொண் டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் எங்கள் உடம்பு வியர்த்திருந்ததும் உடம்பில் மேல் துண்டும் இல்லாமல் நாங்கள் இருந்ததும் அவர் எங்களை வேலையாட்களாக எண்ணுவதற்கு இடம் தந்தன. அதளுல் அவர் எங்களை உட்காருங்கள் என்று கூடச் சொல்லவில்லை. நாங்கள் அந்த இரண்டு மூட்டை
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/105
Appearance