பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. நித்திலக் கட்டுரைகள் எங்கள் ஆசிரியரும் இப்படித் தான் கூறினர். ஆல்ை, "உலகத்தொடு ஒட்ட ஒழுகல்' என்பது தான் சரியாக விளங்கவில்லை. மணி : தம்பி, நீ நல்ல அறிவாளி ஆவாய் ; ஆதலால், இந்தப் பாடலின் கருத்தை உனக்கு முதலில் விளக்கிக் கூறிப் பிறகு பதப் பொருளும் கூறுகின்றேன். - கணி : எங்கள் ஆசிரியரும், இந்தப் பாடலின் கருத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். அது போதும் என்று தான் கூறுகின் ருர். மணி : உண்மையே ; இந்தப் பாடலுக்குக் கொண்டு கூட்டிப் பொருள் கூறும் போது இளைஞர் கட்குச் சிறிது துன்பமாக இருக்கலாம். தம்பி, நான் கூறுவதைக் கவனி. நாம் படிப்பது ஏட்டுச் சுரைக் காயாக இருத்தல் கூடாது. கனி : ஏட்டுச் சுரைக்காய் என்பது என்ன அண்ணு ? - மணி : ஒரு புலவர் புராணப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது அவர் சுரைக்காய் சாப்பிடுவது நல்லதன்று என்று அங்கிருந்தவர் களுக்குக் கூறினராம். இதை அந்தப் புலவரின் மனைவியும் கேட்டுக் கொண்டிருந்தாளாம். மறுநாள் புலவர் தம் மனைவியிடம், நம் தோட்டத்தில் காய்த் திருந்த சுரைக்காய்கள் எங்கே ?' என்ருராம். அவள் , "சுரைக்காய் சாப்பிடுதல் கூடாது என்று நீங்கள் பிரசங்கத்தில் கூறியதால், நான் அவைகளை அறுத்து ஏழைகட்குக் கொடுத்து விட்டேன் ; என்ருளாம்.