நமச்சிவாய முதலியாரும் நானும் 49 பாடப் புத்தகங்கள் எழுதியும் பேரும் புகழும் பெற்றவர் நம் நமச்சிவாய முதலியார். டாக்டர் ஜான்சன் அவர் கட்கு உடனிருந்து அவருடைய திறமைகளை யெல்லாம் பாஸ்வெல் அவர்கள் குறித்து வைத்தது போன்று இவருடைய அரிய கருத்துக்களை யெல்லாம் எவரும் குறித்து வைக்காமல் போய்விட்டனர். எனக்குத் தெரிந்த அளவிலே அவருடைய அன் பின் அருமை யினையும் கல்வித் திறனையும் நுண்அறிவினையும், உத வுங் குணத்தினையும், முயற்சியால் முன்னுக்கு வந்த வரலாற்றையும் எழுதுவேனே யானுல் அதுவே ஒரு பெரிய நூலாக ஆகிவிடும். என்னைப் போன்று அவரு டன் நெருங்கிப் பழகிய பேரறிஞர்கள் நம் நாட்டிலே இன்றும் இரண்டொருவர் இருந்தே வருகின்றனர். இங்கே நான் எல்லாவற்றையும் விரிவாகக் கூரு மல் இரண்டொன்றை மட்டும் சுருக்கமாகக் கூறலாம் என்று எண்ணுகின்றேன். நமது முதலியார் அவர் கள் கடற்கரை ஓரத்திலே கட்டிய இரண்டு மாளிகை களையும் கூர்ந்து கவனித்தாலே அவருடைய நுண்மை யான அறிவு எவருக்கும் எளிதில் புலப்படும். மழைக் காலத்துக்கு ஏற்ற வகையிலும் வெயிற் காலத்துக்கு வசதியாகவும் அந்த இரண்டு மாளிகைகளையும் தமக்கு ஏற்ற வகையிலே அவர் கட்டி முடித்ததை அறிஞர் பலரும் அந்தக் காலத்திலேயே புகழ்ந்து பாராட்டி இருக்கின்றனர். நம் தமிழ் நாட்டிலே உள்ள அரிய செடிகளையும் மரங்களையும் கொடி வகைகளையும் அரும் பாடுபட்டுத் தொகுத்துத் தம்முடைய தோட்டத்திலே அவைகளைக் காப்பாற்றி வந்திருக்கின்ருர், தாவர நூல் அறிஞர்கள் எல்லாம் அந்தச் செடி கொடி வகைகளை கி. - 4
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/55
Appearance