பக்கம்:நித்திலவல்லி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

479


கொண்டிருந்தான், இளைய நம்பி. அவன் கண் காணக் களப்பிரர் கொடி கீழிறக்கப் பட்டது. காராளர் முதலியவர்கள் எல்லாரும் பயபக்தியோடு அவனருகே நின்று கொண்டிருந்தனர்.

அந்த வேளையில், அரண்மனையின் உட்புறமிருந்து அதே பழைய வெறிக் குரலோடும் உருவிய வாளோடும் ஒடி வந்தான் மல்லன். இப்போது அவன் கை வாளில் குருதி படிந்திருந்தது. "பழி தீர்ந்தது...என் எதிரியைக் கொன்று விட்டேன்" என்று வெறியோடு கூவிய படியே ஓடி வந்து, அந்தக் குருதி படிந்த வாளை இளைய நம்பியின் காலடியில் வைத்து விட்டு மூச்சு இரைக்க அவனை வணங்கி நின்றான் மல்லன்.


16. கோட்டையும் குல நிதியும்

ல்லன் தெரிவித்த செய்தியைக் கேட்டதும் அழகன் பெருமாள், இளையநம்பியின் காதருகே வந்து மெல்லக் கூறினான்:

“ஐயா! தென்னவன் மாறனைக் கொன்றதற்காகக் களப்பிரக் கலியரசனைத் தன் கைகளாலேயே, பழி வாங்கப் போவதாகச் சிறையிலிருக்கும் போதே இவன் பல நாள் விடாமல் கோபத்தோடு எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அதை இப்போது நிறைவேற்றிவிட்டான் என்று தெரிகிறது! கலியரசனோடு போரிடும் வேலை இனி நமக்கு இல்லை. அதை இவன் நிறைவேற்றிப் பழி தீர்த்து விட்டான்.” பகைவனின் குருதி படிந்த அந்தக் கொலை வாளைப் பார்த்து, இளையநம்பியின் கண்கள் கூசின. அந்த வாளில் யாருடைய குருதி படிந்திருந்ததோ, அந்தக் குருதிக்கு உரியவன் தன் உடன் பிறந்தவர்களில் இருவரையும், உடன் பிறவாத சகோதரர்களாகிய பல பாண்டிய வீரர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/477&oldid=946706" இலிருந்து மீள்விக்கப்பட்டது