பக்கம்:நித்திலவல்லி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

95



அவன். அந்த வேளையில், அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய் விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளைய நம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது.

யாழுக்கு நரம்பு பின்னிக் கொண்டிருந்தவன் பெயர் காரி என்றும், அவன் யாழ் வல்லுநனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகின்றான் என்றும் தெரிந்தது.

வாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தவன் தேனூர் மாந்திரீகன் செங்கணான் என்றும், அவன் மாந்திரீகனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகிறான் என்றும் பூத்தொடுத்துக் கொண்டிருந்தவன் பெயர் சாத்தன் என்றும், அவன் மாலை தொடுப்பவனாக அகநகரில் கலந்து ஊடுருவியிருக்கிறான் என்றும் அறிய முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தவனை, அவனுடைய உருவத்தின் காரணமாகவோ என்னவோ குறளன் என்று அழைத்தார்கள் அங்கிருந்தவர்கள். அவன் சந்தனம் அரைப்பவனாக நகரில் கலந்திருந்தான். நகரில் இருக்கும் பாண்டியநாட்டு மக்களின் கருத்தைக் களப்பிரர்களுக்கு எதிராகத் திரும்புவதில் கழற்சிங்கன் உட்பட இவர்கள் ஐவரும் நாளுக்கு நாள் வெற்றியடைந்து வருவதாகத் தெரிந்தது.

மதுரை மாநகர மக்களுக்குக் களப்பிரர் ஆட்சியில் வெறுப்பு வளர வளர, இவர்கள் செயல்களும் வளர்ந்து கொண்டிருந்தன. களப்பிரர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உணர்வு நெருப்பாய்க் கனிந்து கொண்டிருந்தது என்பதை இந்த நண்பர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. உப வனத்திலிருந்து, அகநகரில் வெள்ளியம்பலத்திற்கு இரகசியமான நிலவறை வழி ஒன்று இருப்பதை இவர்கள் வேண்டும்போதெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும், நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் சுற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/96&oldid=945260" இலிருந்து மீள்விக்கப்பட்டது