பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்வி முன்னேற்றத்தில் எழுஞாயிறு 135 என்ற அடிகளினால் பிறைசூடிய பிஞ்ஞகன் சனகாதி முனிவர்க்கு ஞான நிலையைப் பேசாமல் குறிப்பித்த செய்தி அறியக் கிடக்கின்றது. .ெ ம ய் யு ண ர் வு பெற்ற தாயுமான அடிகளும் கண் மூடி மெளனியாகிச் சும்மா இருக்க நினைப் பதையே தம் குறிக்கோள் என இறைவன் திருமுன் முறை யிட்ட செய்தியையும் அறிகின்றோம். இவற்றால் உலக உணர்வுக் கல்வியிலும் வாய்க்குட் படிப்பே நிறைந்த பயனைத் தருகின்றது என்பதை அறிய முடிகின்றது. இவ்வாறு வாய்க்குட் படிப்பினால் மேற்குறிப்பிட்ட மூன்று நூல்களையும் விரைவாகப் படிக்க முடிந்தது. பேச்சுக் கருவிகட்கு வேலையில்லாததால் உடல் சோர்வு ஏற்பட வில்லை. கண்ணும்மனமும் மட்டிலும் செயற் பட்டதால் படிக்கும் பொருளில் அதிக்கவனம் சென்றது. குறைந்த கால அளவில் அதிகமான பகுதிகளைப் படிக்க முடிந்தது அடுத் திருப்போருக்கு இடையூறாக இல்லாமல் படிக்க இயல்வதை யும் கண்டேன். படிப்பில் ஆர்வமும் பற்றும் உண்டானதை இதில் காணமுடிந்தது. படிக்கும் பழக்கமும் பாங்குடன் வளர்ந்தது. பிற்காலத்தில் இதிகாசங்கள், புராணங்கள், பக்திப் பனுவல்கள் பாடமாக வருங்கால் அதிலுள்ள கிளைக் கதைகளைத் தெளிவாக அறிந்து கொள்ள இந்த வாய்ப்பு துணையாக அமைந்தது. இதனால் என்னுடைய கவலையும் சோர்வும் மறைந்தன. ஓராண்டுக் காலம் இவ்வாறு பயனுள்ள வாறு கழிந்ததை இப்போது நினைந்து மகிழ்கின்றேன். இதுவும் ஒருவகையில் என் ஊழ்வினையாக அமைந்ததோ என்றும் சிந்திக்கின்றேன்.